சென்னை அணி தேர்வு செய்ய நினைக்கும் இரண்டு வீரர்கள்!! ராபின்
உத்தப்பா வெளியிட்ட தகவல்!!
ஐ.பி.எல். மினி ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று
வருகிறது.இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் தொடரின் 16- வது சீசன்
வருகின்ற 2023 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற
உள்ளது. அதற்காக ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் தேர்வு செய்யும்
பணியானது நடைபெற்று வருகிறது.
இந்த முறை உள்ளூர், வெளியூர் வீரர்கள் அடிப்படையில் விளையாட உள்ளதால் மிகச்சிறந்த போட்டியாக இது அமைய உள்ளது. மேலும் சில புதிய விதிமுறைகளையும் ஐபிஎல்
நிர்வாகம் கொண்டு வந்துள்ளதால் இந்த சீசனில் பரபரப்புக்கு பஞ்சம்
இருக்காது. இந்நிலையில் 10 அணிகளும் தங்களது அணியில் இருந்து நீக்கிவிட்ட
சேர்த்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் தொடருக்கு முன் மினி ஏலமானது கொச்சியில் வருகின்ற 23 ஆம் தேதி
நடைபெற உள்ளது. இது தொடர்பாக முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா
கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இவர் ஐபிஎல்- இல் சென்னை மற்றும்
கொல்கத்தா அணிக்காக விளையாடி கோப்பையை வென்றுள்ளார்.
அதில் விக்கெட் கீப்பர் குர்பாஸக்கு பதிலாக ஒரு இந்திய வீரரை
கொல்கத்தா அணி தேர்வு செய்ய வேண்டும்.
அந்த அணி ஆடும் லெவலில் டிம் சவூதி மற்றும் லாக்கி பெர்குசன் ஆகிய இருவரையும் ஆட வைக்க நினைத்தால் அவர்கள் குர்பாசை தான் வெளியேற்ற வேண்டும். ஏனெனில்
ரசல் மற்றும் சுனில் நரைனையும் ஆடும் லெவலில் இருந்து நீக்க மாட்டர்கள்.
அடுத்து ஆண்ட்ரே ரசலுக்கும் மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டும். மூன்றாவதாக
இந்திய வேகபந்து வீச்சாளரை தேர்வு செய்ய வேண்டும். ஷர்துள்தாக்கூர் மற்றும் உமேஷ் யாதவ்- க்கு பதிலாக ஜெயதேவ் உனத்கட் போன்ற மூத்த வீரரை தேர்வு செய்ய வேண்டும்.
அடுத்து சென்னை அணியானது ப்ராவோக்கு பதிலாக சிறந்த ஒரு ஆல்-
ரவுண்டரை தேர்வு செய்ய வேண்டும்.
கூடவே சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை தேர்வு செய்ய வேண்டும். பிராவோக்கு பதிலாக சென்னை அணியானது ஷாம் கரனை தேர்வு செய்யும். ஏனெனில் அவர் ஏற்கனவே
சென்னை அணிக்காக விளையாடியவர். ஆகையால் நிச்சயம் சாம் கரனை
குறி வைப்பர். அடுத்து சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் – க்கு மனிஷ் பாண்டே போல
போல வீரரை தேர்வு செய்யும்.
மனிஷ் பாண்டேக்கு ஐபிஎல் அதிக போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளது. சென்னை அணி எப்போதும் அனுபவம் வாய்ந்த வீரர்களை தேர்வு செய்யும் என்பதால் இந்த
இரு வீரர்களையும் கட்டாயம் முயற்சி செய்யும். இவர்கள் கிடைக்காத
பட்சத்தில் வேறு மாற்று ஏற்பாட்டிற்கு அந்த அணி வழி செய்து இருக்கும்
என்றும் ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.