பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அசத்தல் திட்டம்! இவர்களுக்கு ரூ 2000 வழங்கப்படும்!

0
92
The school education department released a crazy program! They will be given Rs 2000!
The school education department released a crazy program! They will be given Rs 2000!

பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அசத்தல் திட்டம்! இவர்களுக்கு ரூ 2000 வழங்கப்படும்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.அதனால் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது.

நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள், போக்குவரத்து சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளது.ஆனால் கடந்த வாரங்களில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும் திமுக தேர்தல் வாக்குறுதியாக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து.அந்த வகையில் பெண்களுக்கு கட்டணம் இல்லாத பயண சீட்டு வழங்கப்பட்டு வருகின்றது.பள்ளிகளுக்கும் பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது.

அதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்,நான் முதல்வன் திட்டம் போன்றவைகளும் கொண்டு வந்துள்ளது.இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளையும் தூய்மையாக வைக்க வேண்டும். மாணவர்கள் பாதுகாப்புடனுடம், சுகாதாரத்துடன் இருக்கின்றனரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 31  ஆயிரத்து 210 அரசு தொடக்கம்  மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு தலா ரூ இரண்டாயிரம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த திட்டத்திற்காக ரூ 6 கோடியே 24 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த தொகையின் மூலம் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் போன்றவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.மேலும் இந்த பணிகள் பள்ளிகளில் முறையாக மேற்கொள்ளப்படுகின்றதா என்பதை மாவட்ட  கல்வி அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

author avatar
Parthipan K