சேலத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா! பீதியில் பொதுமக்கள்!
கொரோனா தொற்றானது உலக நாடுகள் அனைத்தையும் பெருமளவு பாதித்தது. அத்தொற்றிலிருந்து பொதுமக்கள் தற்பொழுது தான் மீண்டு வந்து உள்ளனர்.அவ்வாறு மீண்டு வந்தாலும் இன்றளவும் அதன் தாக்கம் இருந்து கொண்டே உள்ளது. இதைப்போல உலக மக்கள் அனைவரும் கரோனோ தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வந்துள்ளனர். அவ்வாறு இருக்கையில் தொற்று பாதிப்பானது காலத்திற்கேற்ப உருமாறி கொண்டே உள்ளது. முதலில் கொரனோ தொற்றானது டெல்டா வகை வைரஸ் ஆக மாறியது. தற்பொழுது ஓமைக்ரா வைரஸ் ஆக மாறி அதிவேகமாக அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது.
இந்நிலையில் இன்றளவும் குழந்தைகளுக்கு என்று கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை. தற்பொழுது வரை குழந்தைகளுக்கான தடுப்பூசி கொண்டு வரும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சேலத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் பதினோராவது வகுப்பை சேர்ந்த மாணவிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதேபோல அயோதியபட்டினம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி படித்து வருகிறார். இவருக்கு இரு தினங்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்து இருந்துவந்துள்ளது.
அப்பொழுது கரோனா சோதனை எடுத்து பார்த்த பொழுது இவருக்கு கரோனா பாசிடிவ் சான்றிதழ் வந்துள்ளது. அடுத்தடுத்து மாணவர்களுக்கு பரவும் முன்னிலையில் பள்ளிகளுக்கு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்த இரு மாணவர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற மாணவர்களுக்கும் தொற்று பரிசோதனை எடுப்பதாக கல்வி நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் நேற்றைய நிலவரப்படி சேலத்தில் நாற்பத்தி ஒருவருக்கு மேல் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் மக்கள் வெளியே நடமாடுவதற்கு அச்சப்படுகின்றனர். அதைப்போல மாணவர்களுக்கு இன்றளவும் தடுப்பூசி வராததால் தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க கூடுமோ என்ற அச்சமும் மக்களிடையே நிலவி வருகிறது.