ஜிகா வைரஸ் பாதித்த கர்ப்பிணிகளுக்கு இப்படித்தான் குழந்தை பிறக்கும்! அமைச்சரின் அதிர்ச்சி தகவல்!

0
128
This is how babies are born to pregnant women infected with the Zika virus! Minister's shocking information!
This is how babies are born to pregnant women infected with the Zika virus! Minister's shocking information!

ஜிகா வைரஸ் பாதித்த கர்ப்பிணிகளுக்கு இப்படித்தான் குழந்தை பிறக்கும்! அமைச்சரின் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் முதன்முதலாக கேரளாவில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.அதே போல் தற்போது தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் சமீப காலங்களாக ஜிகா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொசுக்கள் மூலமாக இந்த வைரஸ் பரவுவதால், கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் தமிழகத்திலும் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதன் காரணமாக, கேரள தமிழக எல்லையில் பரிசோதனைகள் துரிதமாக  முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கோவை மக்களுக்கு வைரஸ் பரவல் குறித்தும் கொசுக்கள் மூலம் வைரஸ் பரவுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியுள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார்.

டெல்டா, டெல்டா பிளஸ் என புது வைரஸ்கள் உருவாகி வருகின்றன. ஜிகா வைரசால் பாதிக்கப்படும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் சிறிய தலையுடன் இருக்கும் என்று  கூறியுள்ளார். இதன் காரணமாக எல்லைப்பகுதியில் பரிசோதனைகள் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஜிகா வைரஸ் ஏடிஸ் கொசுக்கள் மூலமாக பரவுவது கண்டறியப்பட்டதால், தமிழகத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் தமிழகத்தில் அதிக பாதிப்பு இல்லை என்றும் எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் கூறினார். இதுவரை 2500 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.ஜிகா வைரஸ் என்பது கொடிய வைரஸ் இது முதன்முதலில் உகாண்டாவில் உள்ள குரங்குகளுக்கு, கடந்த 1947ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இந்த வைரஸ் ஆனது 3 முதல் 14 நாட்கள் வரை மனித உடலில் இருக்கும் இதுவரை ஜிகா வைரஸுக்கு எந்த தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அறிகுறிகள் அற்றதாக இருந்தாலும் இது சிலருக்கு காய்ச்சல், தலை வலி, அரிப்பு, வெண்படலம், தசை மற்றும் மூட்டு வலிகளை ஏற்படுத்தும் என்றும் இவை அனைத்தும் பொதுவாக 2 முதல் 7 நாட்கள் வரை காணப்படும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது என்றும் அவர் கூறினார். இந்த வைரஸ் ஆனது வைரஸ் பாதித்தோருடன் நெருங்கி பழகுவோருக்கும், உடலுறவு கொள்வோருக்கும் பரவும் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Previous articleஒரு மணி நேரம் ஆகியும் வேகவில்லை! போலி முட்டைகளை வாங்கி ஏமாந்த மக்கள்!
Next articleதமிழகத்தில் கூடுதல் மின்கட்டணம் கூடாது!! அரசின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!!