தலைவலியால் அடிக்கடி அவதிப்படுகிறீர்களா ? மாத்திரை போடாமல் தலைவலியை போக்க பொன்னான வழிகள் !

0
149

ஓய்வில்லாத வாழ்க்கை, பணிச்சூழல், குடும்ப பிரச்சனை என பல காரணங்களால் பலருக்கும் தலைவலி ஏற்படுகிறது. மற்ற உடல்நல பிரச்னைகளை காட்டிலும் தலைவலி வந்துவிட்டால் நம்மால் எந்த வேலையிலும் கவனத்தை செலுத்த முடியாது. பலரும் இதற்கு மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள், ஆனால் இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே சில வீட்டு வைத்திய முறைகளை நீங்கள் கடைபிடிப்பதன் மூலம் உங்கள் தலைவலியை நொடிப்பொழுதில் பின்விளைவுகள் இல்லாமல் சரிசெய்யலாம்.Pressure points for headaches: Locations, effectiveness, and tips

1) தலைவலி என்பது மட்டுமல்லாது பொதுவாக அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் மசாஜ் ஒரு நல்ல தீர்வாக கருதப்படுகிறது. உடலில் ஏதேனும் வலி ஏற்பட்டாலும் கூட நீங்கள் சிறிது நேரம் மசாஜ் செய்யும்பொழுது உங்கள் வலி இல்லாமல் போவதோடு நல்ல உறக்கமும் கிடைக்கிறது. பொதுவாக மசாஜ்கள் நம்பமுடியாத அளவிற்கு சிகிச்சை அளிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.Stolenband Ice Cold Pack Reusable Ice Bag Hot Water Bag for Injuries, Hot & Cold  Therapy and Pain Relief (Multi color) (ice bag "9 inch") (Pack of 1) -  JioMart

2) தலைவலியை போக்க சிறந்ததொரு வீட்டு வைத்தியமாக ஐஸ் பேக் கருதப்படுகிறது. நெற்றியாக இருந்தாலும் சரி, உச்சந்தலையாக இருந்தாலும் சரி வலி ஏற்பட்டால் அந்த இடத்தில நீங்கள் ஒரு ஐஸ் பேக்கை வைக்க உடனடி வலி நிவாரணம் கிடைக்கும். ஐஸ் பேக் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் உறைந்த ஜெல் பேக்கைப் பயன்படுத்தலாம் அல்லது குளிர்ந்த நீரில் ஒரு துணியை நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.5 essential oils for headaches and migraines | HealthShots

3) லாவெண்டர் எண்ணெயில் பல மூலிகைகள் கலக்கப்பட்டு இருக்கிறது, இதில் தலைவலியை நீக்கக்கூடிய சிறப்பான பொருட்கள் உள்ளது மற்றும் உங்களை அமைதியாகவும், நிதானமாகவும் உணர வைக்கிறது. லாவெண்டர் எண்ணெயை வலியுள்ள இடத்தில தடவி மெதுவாக மசாஜ் செய்யலாம் அல்லது அதனை உள்ளிழுப்பதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.How to perform: 3 most common yoga breathing exercises | The Times of India

4) சிலருக்கு பதட்டம் மற்றும் மன அழுத்தம் காரணமாக தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது மற்றும் இது உங்கள் நரம்புகளை பாதிக்கக்கூடும். இதற்கு சில சுவாசப் பயிற்சிகள் செய்வது நல்ல பலனை தரும், சுவாச பயிற்சி செய்வதால் நரம்புகள் வலுப்பெற்று உங்கள் தசைகளை அமைதிப்படுத்துகிறது. ஒரு அமைதியான இடத்தில் உட்கார்ந்து, மெதுவாக சுவாச பயிற்சி செய்யுங்கள், இது சிறந்த பலனை கொடுக்கும்.Here's why you should never drink your tea too hot – Food & Recipes

5) ஒரு கோப்பை சூடான தேநீர் உங்கள் தலைவலியை நொடிப்பொழுதில் நீக்கக்கூடிய சிறந்த மாமருந்தாகும், சூடான தேநீர் குடிப்பது உங்களின் பதட்டமான தசைகளுக்கு வெப்பத்தைத் தருகிறது. சாமந்திப்பூ, டேன்டேலியன் மற்றும் இஞ்சி போன்ற பொருட்களால் செய்யப்பட்ட மூலிகை தேநீர் குடிப்பது தலைவலியைப் போக்க உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Previous articleதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு..உடனே விண்ணப்பியுங்கள் !
Next articleவிமான பயணிகளின்  பயணத்தை ரத்து செய்தால் அபராதம்! டிஜிசிஏ  வெளியிட்ட புதிய கட்டுபாடுகள்!