தல ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! வலிமை படத்தின் அப்டேட் இதோ…

Photo of author

By CineDesk

வலிமை படத்தில் அப்டேட் வெளியாகி அஜித் பட ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

அஜித் பற்றிய சிறிய புகைப்படமோ, செய்தியோ வெளியே கசிந்தால் ரசிகர்களுக்கு சொல்லவே வேண்டாம், அந்த அளவுக்கு குஷியாகி விடுவார்கள். அந்த வகையில் ஒரு தகவல் தான் தற்பொழுது கசிந்துள்ளது. போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே ரஜினி உடன் ‘காலா’ படத்தில் நடித்துள்ளார். கொரோனா பரவலால் கடந்த ஆண்டு படப்பிடிப்பு தள்ளிப்போனது. பின்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் வலிமையின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்தன.

வலிமை படம் எப்பொழுது வரும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருந்த நிலையில் அதன் அப்டேட் கேட்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த முதலமைச்சர் முதல் பிரதமர் வரை ரசிகர்களின் அலப்பறைகள் நீண்டன. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பேனர் அடித்தும் வலிமைப்பட அப்டேட்டை ரசிகர்கள் கேட்டு வந்தனர். இதனிடையே, லாங் டிரைவ் செல்வது, துப்பாக்கி சுடும் பயிற்சி எடுப்பது என அனைத்திலும் நடிகர் அஜித் கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில் வலிமைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் டப்பிங் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அஜித் தனது டப்பிங் பணிகளை முடிடுத்து விட்டாராம். இதனை தொடர்ந்து அஜித் பிறந்த நாளான மே-1ம் தேதி வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது என கூறப்படுகிறது.