தீபாவளி பண்டிகை பிறகு பள்ளிகள் திறப்பா? அமைச்சர் விளக்கம்!

Photo of author

By Rupa

தீபாவளி பண்டிகை பிறகு பள்ளிகள் திறப்பா? அமைச்சர் விளக்கம்!

கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களை உலுக்கி எடுத்துவிட்டது.அந்த ஒன்றை ஆண்டுகளாக மக்கள் ஆறு மாத காலம் ஊரடங்கின் போதும் அடுத்த ஆறு மாதம் தளர்வுகளற்ற ஊரடங்கு என மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.தற்போது  தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் படி அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.மக்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.இந்த சூழலில் மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள்  தொற்று பரவல் காரணமாக விடுப்பு அளிக்கப்பட்டது.அதனையடுத்து சென்ற மாதம் முதல் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

அதேபோல கல்லூரி மாணவர்களுக்கும் பள்ளி ,கல்லூரிகள் திறக்கப்பட்டு பாடங்களை பயின்று வருகின்றனர்.இந்நிலையில் 1ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்று பல கேள்விகள் எழுந்தது.அதுமட்டுமின்றி அது சம்மதாமாக தலைமை செயலகத்தில் பல ஆலோசனைகளும் நடைபெற்றது.சென்ற வாரம் முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.அதில் அடுத்த மாதம் 1 ஆம் தேதியிலிருந்து 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்படும் என கூறினார்.இவ்வாறு அவர் அறிவிப்பை வெளியிட்டதும் பல தரப்பில் பள்ளிகளை திறக்க எதிர்ப்பும் பல தரப்பில் ஆதரவும் அளித்தனர்.

அவ்வாறு கூறுபவர் மத்தியில் சிலர் பள்ளி நவம்பர் 1 ஆம் தேதி திறக்க உள்ளது மூன்று நாட்களில் நவம்பர் 4 ம் தேதி தீபாவளி பண்டிகை வர உள்ளது.அதனால் பள்ளிகள் அனைத்தும் நவம்பர் 5 ஆம் தேதி தான் திறக்கப்படும் என கூறி வந்தனர்.இவ்வாறு பெரும்பாலானோர் கூறி வந்தனர்.அதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறியதாவது,தீபாவளி பண்டிகை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என்பதை யாரும் நம்ப வேண்டாம்.முதல்வர் கூறியது போல நவம்பர் 1 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.மாணவர்கள் அனைவரும் நவம்பர் மாதம் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்று இவ்வாறு கூறியிருந்தார்.