தொப்பை வாயு பிரச்சனை சரியாக வேண்டுமா? வெறும் மூன்று பொருட்கள் இருந்தால் போதும்! 

0
191

தொப்பை வாயு பிரச்சனை சரியாக வேண்டுமா? வெறும் மூன்று பொருட்கள் இருந்தால் போதும்!

தொப்பை வேகமாக குறையும் மலச்சிக்கல், வாயு, செரிமான சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஆகியவற்றை குணப்படுத்த வழிமுறைகளை காணலாம்.

தற்போது உள்ள சூழலில் உணவு முறைகள் மற்றும் பழக்க வழக்கங்கள் மாறி வருகிறது. இதன் விளைவாக நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் சரிவர கிடைக்க பெறுவதில்லை.

இதன் விளைவாக செரிமான பிரச்சனைகள் வாயு பிரச்சனைகள் மற்றும் அதிகப்படியான உடல் பருமன் ஏற்படுவது இவை அனைத்தையும் குணப்படுத்தும் எவ்வித செலவுமின்றி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் அதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.

உடல் எடையை குறைப்பதற்கு சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகப்படியான உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. தினசரி சாப்பிடும் உணவுகளுடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வருவதன் காரணமாக உடல் பருமன் விரைவில் குறையும்.

இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் கெட்ட கொழுப்புக்களை கரைத்து உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது. ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் செரிமான சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் முழுமையாக குணப்படுத்த உதவும்.

ஓமம் இதில் உள்ள பண்புகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் அதிகப்படியான கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

பல வகையான நோய்களை குணப்படுத்த உதவும் . முக்கியமாக வறுமனை குறைக்க உதவுகிறது. சோம்பு இதிலுள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடம்புகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றுகளை முழுமையாக குணமாக்கி எவ்வித பாதிப்புகள் ஏற்படாதவாறு பாதுகாத்து கொள்கிறது.

இரண்டு ஸ்பூன் சீரகம், இரண்டு ஸ்பூன் ஓமம்,2 ஸ்பூன் பெருஞ்சீரகம் ஆகிய மூன்றையும் மிதமான சூட்டில் வறுத்து அதன் பிறகு பொடி செய்து ஒரு டம்ளர் மோர் அல்லது ஒரு டம்ளர் நீர் ஆகியவற்றில் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கி அதன்பின் காலை வெறும் வயிற்றில் பருகி வருவதன் காரணமாக உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்புகள் மற்றும் செரிமான சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வாயு பிரச்சனைகள் அனைத்தையும் முழுமையாக குணமாக்க உதவுகிறது.

Previous articleசீரற்ற மாதவிடாய் சரியாக வேண்டுமா? 10 உலர் திராட்சை இருந்தால் போதும்!
Next articleமேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும் நாள்!!