சீரற்ற மாதவிடாய் சரியாக வேண்டுமா? 10 உலர் திராட்சை இருந்தால் போதும்!

0
203

சீரற்ற மாதவிடாய் சரியாக வேண்டுமா? 10 உலர் திராட்சை இருந்தால் போதும்!

காய்ந்த திராட்சையில் கொட்டி கிடக்கும் மருத்துவ அதிசயங்களை பற்றி இந்த பதிவின் மூலமாக.

நம் தினசரி எடுத்துக் கொள்ளக் கூடிய உணவுகள் நம் உடலுக்கு போதுமான சத்துக்களை அளிக்கிறது. ஒரு சில சத்துக்கள் சரிவர நம் உடலுக்கு கிடைப்பதில்லை அதிகமாக உலர் திராட்சைகளை சாப்பிடுவதன் நம் உடலுக்கு கிடைக்க கூடிய நன்மைகளைப் பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம்.

திராட்சை பழங்களை நன்றாக வேக வைத்து அதன் பிறகு காய வைத்து அதன் மூலம் கிடைக்கக்கூடியது உலர் திராட்சை காய்ந்த திராட்சை என்று நாம் அழைக்கிறோம். உலர் திராட்சையானது கருப்பு, பச்சை, பழுப்பு போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணக்கூடிய ஒரு உகந்த பொருள் ஆகும். திராட்சைகளை பழமாக சாப்பிடுவதை விட உலர் திராட்சைகளாக உண்பதன் காரணமாக 10 மடங்கு சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கிறது.

உலர் திராட்சையில் உள்ள சத்துக்களான வைட்டமின் சி, விட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மேக்னீசியம் சத்துக்கள் அதிகபடியாக நிறைந்துள்ளது.

உலர் திராட்சைகளை நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் உண்பதன் காரணமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து உடலினை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் தினசரி காலை, மதியம், இரவு நேரங்களில் உலர் திராட்சைகளை ஊற வைத்து அதன் பிறகு உண்பதன் காரணமாக எலும்புகள் வலுவடைந்து கை, கால் வலி மூட்டு வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

உலர் திராட்சை 10 , நீர் சேர்த்து நன்றாக வேக வைத்து அதன் பிறகு ஆர வைத்து நீர் மற்றும் திராட்சை ஆகியவற்றை உண்பதன் காரணமாக அதிகப்படியான உடல் சூடு குறையும். இவ்வாறு செய்து வந்தால் உடல் சூடு தணிந்து உடலினை முழுமையாக வைத்திருக்க உதவுகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ரத்தப்போக்கு, வயிற்று வலி, சோர்வடைதல் போன்றவற்றை குணப்படுத்துவதற்கு உலர் திராட்சைகளை ஊறவைத்து சாப்பிடுவதன் காரணமாக இந்த பிரச்சனைகள் குணமடையும் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையும் சரி பண்ண உதவுகிறது.

author avatar
Parthipan K