நரம்பு சுருள் பிரச்சனையில் இருந்து விடுதலையாக இந்த ஒற்றை கசாயம் போதும்!!

Photo of author

By Rupa

நரம்பு சுருள் பிரச்சனையில் இருந்து விடுதலையாக இந்த ஒற்றை கசாயம் போதும்!!

Rupa

நரம்பு சுருள் பிரச்சனையில் இருந்து விடுதலையாக இந்த ஒற்றை கசாயம் போதும்!!

நரம்பு சுருள் அதாவது வெரிகோஸ் வெயின் என்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு அதிகப்படியான கால் வலி உண்டாகும். அதிக நேரம் இன்று வேலை பார்ப்பவர்களுக்கு தான் இந்த நோய் விரைவில் வரும். கெண்டை காலில் நரம்பானது ஆங்காங்கே சுருண்டு காணப்படும்.

இதனை ஆரம்ப கட்டத்தில் தவிர்க்க வேண்டும் என்றால் வீட்டில் இருக்கும் சில வைத்திய முறைகளை வைத்து சரி செய்யலாம். ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் விட்டால் தான் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்லும் படியாக ஆகிவிடும்.

ஆரம்ப கட்டத்தில் குணமாக்கும் முறை:

நமது வீட்டில் இருக்கும் வெற்றிலையை எடுத்துக்கொண்டு அதில் நல்லெண்ணெய் தடவி, சிறிது நேரம் தீயில் காட்டி அதனை நரம்பு சுருள் இருக்கும் இடத்தில் போட வேண்டும்.

இவ்வாறு செய்து வர ரத்த ஓட்டம் சீராகி ஆரம்ப கட்ட காலத்திலேயே பரமசிருள் பிரச்சனை சரி செய்யலாம். இது அடுத்த கட்டத்திற்கு செல்லும் பொழுது இந்த வழிமுறை ஏதும் பயன் அளிக்காது.

இரண்டாவது முறை:

தேவையான பொருட்கள்:

தேவதாரு

காஞ்சொறி

கருங்குறிஞ்சி

சுக்கு

செய்முறை:

அடுப்பில் பாத்திரம் வைத்து 300ml தண்ணீர் சேர்க்க வேண்டும். பின்பு நாம் எடுத்து வைத்துள்ள தேவையான பொருட்கள் அனைத்திலும் 2 கிராம் என்ற அளவில் ஒவ்வொன்றையும் சேர்க்க வேண்டும்.

இந்த 300 எம்எல் தண்ணீர் ஆனது 100 எம்எல் தண்ணீர் வரும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். மிதமான சூடு வந்ததும் இதனை வடிகட்டி குடிக்கலாம்.

குறிப்பாக உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே இதனை பருக வேண்டும். காலை மாலை என இரு வேலையும் தொடர்ந்து குடித்து வர நரம்பு சுருள் பிரச்சனை விரைவில் குணமாகும்.