நீக்கப்பட்ட 5 அதிமுக நிர்வாகிகள்! காரணம் சசிகலா!

Photo of author

By Kowsalya

அதிமுக நிர்வாகிகள் 5 பேர் சசிகலாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதற்காக அந்த ஐந்து பேரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர்.

தொடக்கத்திலிருந்தே சர்ச்சைக்குரிய ஒருவராக மாறியிருந்த சசிகலா, சமீபத்தில் போனில் தொடர்புகொண்டு அதிமுக நிர்வாகிகள் உடன் பேசினார். அந்த ஆடியோ வெளிவந்த மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

நேற்று அதிமுக தலைமை செயலகத்தில் நடைபெற்ற எம்எல்ஏ கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அந்த கூட்டத்தில் செய்தி தொடர்பாளர் புகழேந்தியை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து மேலும் 5 பேரை அதிமுக தலைமை கட்சியிலிருந்து நீக்கி உள்ளது, என தகவல்கள் வந்துள்ளது. மேலும் இவர்களுடன் எந்த ஒரு தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளது.

இதன்படி

1. சேலம் புறநகர் மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் ராமகிருஷ்ணன்.
2. சிவகங்கை மாவட்ட புரட்சித் தலைவி பேரவை இணை செயலாளர் சரவணன்.
3. சண்முகப்பிரியா மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர்.
4. திருநெல்வேலி மாவட்ட எம்ஜிஆர் மன்ற முன்னாள் இணை செயலாளர் திம்மராஜபுரம் ராஜகோபால்.
5. திரு.டி . சுந்தர்ராஜ் தச்சநல்லூர் பகுதி மாணவர் அணி இணை செயலாளர் ஆகியோரை அதிமுக தலைமை கட்சியிலிருந்து நீக்கி எம்எல்ஏ கூட்டத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இவர்களுடன் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தியும் கட்சியை விட்டு நீக்கியுள்ளனர்.

இந்த நீக்கத்திற்கு கார ணம் சசிகலாவுடன் போனில் தொடர்பு கொண்டு பேசியதற்காக என்று சொல்லி உள்ளது.