பெரியகுளம் டிஸ்பி தலைமையில் அதிமுகவினர் இடையே  கலைந்துரையாடல்!

Photo of author

By Rupa

பெரியகுளம் டிஸ்பி தலைமையில் அதிமுகவினர் இடையே  கலைந்துரையாடல்!

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானபட்டி காவல் நிலையத்தில் இன்று  பெரியகுளம் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் முத்துகுமார் தலைமையில் அதிமுக சார்பில்  தேனியில் உள்ள பங்களாமேட்டில் மின்சார உயர்வை கண்டித்து ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்கு இடையே  தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் தேவதானபட்டி  சுற்றி உள்ள ஊர்களில் உள்ள  அதிமுக நிர்வாகிகளை  நேரில் அழைத்து   நடைபெற உள்ள ஆர்பாட்டத்திற்கு எத்தனை வாகனங்கள் செல்கின்றன அவ்வகை வாகனம் எந்த வழியாக செல்ல வேண்டும் .

அவ்வாறு தொண்டர்கள்  அமைதியான முறையில் மிகவும் பாதுகாப்பாக எவ்வித அசம்பாவிதங்கள்  இருக்க  கூடாது .அதிமுக தொண்டர்கள் யாரும் ஆர்பாட்டத்திற்கு மது அருந்தி வர  கூடாது  எனவும் மிகவும் நல்ல முறையில்  சென்று வர அதிமுக நிர்வாகிகளிடம்  டிஸ்பி முத்துக்குமார் மிகவும் கனிவாக  எடுத்துரைத்தார். இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த  கலந்தாய்வு கூட்டத்தில்  தேவதானபட்டி காவல் ஆய்வாளர் சங்கர் , சார்பு ஆய்வாளர் வேல்மணிகண்டன்  சக காவலர்கள் கலந்து கொண்டனர்.