மகள் வயது பெண் காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணை கொலை செய்து விட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு (35). இவர் அதே பகுதியை சேர்ந்த பவித்ரா என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், துரைக்கண்ணுவிற்கு பவித்ரா மகள் முறை என்பதாலும், அவரை விட பவித்ரா 15 வயது சிறியவர் என்பதாலும் அவரின் காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால், துரைக்கண்ணு விரக்த்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில்,பவித்ராவின் வீட்டிற்கு சென்ற துரைக்கண்ணு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து பவித்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அதன்பின் அவரது வீட்டிற்கு வந்து தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த ஊர் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டபகலில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது.