கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க குளத்தில் குளிக்க சென்ற குழந்தைகள்! திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்! 

0
244
#image_title

கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க குளத்தில் குளிக்க சென்ற குழந்தைகள்! திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்! 

குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று குழந்தைகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனதை பதப்பதைக்கும் இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உலகம்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்ற பொழுது 3 குழந்தைகள் நீரில் மூழ்கி பலியாகினர். இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நெஞ்சை உருக்கும் சம்பவமாகும்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உலகம்பட்டி கிராமத்தில்  செட்டி ஊரணி உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த நாகராஜ் – புவனேஸ்வரி என்ற தம்பதியினரின்  மகள் யாழினி வயது 10. நாகராஜன் சகோதரர் லட்சுமணன் என்பவரது மகன்கள் மகேந்திரன் வயது 7, சுந்தர் வயது 5.

இந்த மூன்று குழந்தைகளும் பள்ளி விடுமுறை தினமான இன்று  அப்பகுதியில் உள்ள படமஞ்சி என்ற கிராமத்தில் உள்ள செட்டி ஊரணியில் குளிக்க சென்றுள்ளார்கள். குளிக்க சென்ற சிறுவர்கள் ஆழம் அதிகமான பகுதிக்கு சென்றதால் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பின்னர் உயிரிழந்த சிறுவர்களின் உடல்கள் குளத்தின் நீரில் மிதந்துள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர் குழந்தைகளின் உடல்களை மீட்டனர். 3 குழந்தைகளின் உடல்களும் மீட்கப்பட்டு உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஒரே குடும்பத்தில் மூன்று குழந்தைகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.