கடந்த டிசம்பர் 4 தேதி என்று சென்னையை மிக்சாம் என்ற புயல் பலமாகவே ஆட்டிப்படைத்து விட்டது என்றே சொல்லலாம். 7 வருடங்களுக்கு முன்னர் நடந்தது போலவே சென்னை மக்கள் கடந்த டிசம்பர் மாதம் மழையில் தத்தளித்து போய்விட்டனர்.
அரசு ஏற்படுத்தாத அரசு தர முடியாத சலுகைகள் நடிகர் நடிகைகள் தந்து கொண்டு இருந்தனர். அப்படி எல்லா பகுதிகளிலும் விஜய் டிவி புகழ் KPY பாலா அனைவருக்கும் உதவி செய்தார். அரசே போக முடியாத இடங்களுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு உணவு வழங்குவது, அடிப்படை சேவைகளை செய்து வந்தார். என்னதான் விஜய் டிவியில் தனது புகழ் இருந்தாலும் வெளியில் ஆம்புலன்ஸ்களை வாங்கி ஏழை எளிய மக்களுக்கு வழங்கி மன நிறைவு கொண்டு இருந்தார்.
இந்த இவரது செயல் மிகவும் பாராட்டுக்கு உரியதாகவே மக்களிடம் பெரும் பெயரைக் கொண்டு சேர்த்துள்ளது என்று சொல்லலாம். மழை நிவாரண நிதிக்காக 2 லட்சம் வரை நிதி வழங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இப்படி இருந்த நிலையில் Kpy பாலா இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஒரு போஸ்ட்டை பதிவிட்டுள்ளார். அந்த போஸ்ட் தனது விரல் உடைந்து உள்ளதாக அவர் அந்த போஸ்ட்டை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் தந்த கேப்சன் மிகவும் பேசும் பொருளாக மாறி உள்ளது. “மனம் நிறைந்தது விரல் உடைந்தது” என்ற கேப்சன் அவர் தனது இன்ஸ்டாகிராம் போஸ்டில் தந்து இருந்தார்.
அப்படி இதற்க்கு காரணம் என்ன? என்று கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. பலரும் தங்களது உதவியத்ர்க்கு வாழ்த்துக்களையும், அடிபட்டதற்கு கவலைகளையும் தெரிவித்து உள்ளனர்.. மேலும் பலர் சந்தேகமாக கேள்விகளும் கேட்டு வருகின்றனர்.
https://www.instagram.com/p/C04P6PbxWDa/?igshid=NTYzOWQzNmJjMA==