மார்கழி மாதத்தில் வீட்டு தென்மேற்கு மூலையில் இப்படி செய்தால் பணக்கார யோகம் கிடைக்கும்..!!

Photo of author

By Divya

மார்கழி மாதத்தில் வீட்டு தென்மேற்கு மூலையில் இப்படி செய்தால் பணக்கார யோகம் கிடைக்கும்..!!

நம் அனைவருக்கும் பணத் தேவை இருந்தே கொண்டே இருக்கிறது. பணம் இருந்தால் தான் அடுத்த நொடி வாழ்க்கையை நகர்த்த முடியும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கின்றோம். இந்த பணத்தின் வரவு வீட்டில் அதிகரித்து பணக்கார யோகம் கிடைக்க மார்கழி மாதத்தில் இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள் போதும்.

பரிகாரம்:-

ஒரு பச்சை துணியில் பச்சை கற்பூரம் 1 துண்டு, கோயிலில் இருந்து எடுத்து வந்த வில்வ இலை அல்லது துளசி இலை இரண்டு என்ற எண்ணிக்கையில் வைத்து சின்ன முடிச்சாக கட்டி உங்கள் வீட்டு தென்மேற்கு மூலையில் மாட்டி விடவும்.

மார்கழி மாதம் முழுவதும் இந்த முடிச்சுக்கு தூப தீபம் காட்டி வீட்டில் பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும். மார்கழி மாதம் முடிந்ததும் உள்ளே இருக்கும் இலைகளை கால்படாத இடத்தில் போட்டு விடவும். பச்சை கற்பூரம் கரைந்து இருக்கும். இவ்வாறு இந்த மாதம் முழுவதும் செய்து வந்தால் வீட்டில் பணம் சேர ஆரம்பிக்கும். விரைவில் பணக்காரர் ஆகக் கூடிய யோகம் உங்களுக்கு கிடைக்கும்.