முதல்வரை குறிவைத்த வெடிகுண்டு மிரட்டல்! தலைமை செயலகத்தில் திடீர் பரபரப்பு!
பெரும் தலைவர்கள் செல்வாக்கு உள்ளவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவருக்கும் வருடம் தோறும் ஏதேனும் ஓர் வெடிகுண்டு மிரட்டல் வந்துவிடுகிறது. சிலர் பொழுதுபோக்கிற்காக இவ்வாறு மிரட்டல் விட்டு வருகின்றனர். தற்சமயத்தில் நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. போலீசார் அஜித் வீட்டை சோதனை நடத்தி மேலும் அவ்வாறு தவறான தகவலை அளித்த நபரை கண்டுபிடித்து தக்க தண்டனை அளித்தனர். அதனை எடுத்து தற்பொழுது தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னையில் உள்ள தலைமை செயலகம் மட்டுமின்றி தொடர்ந்து நான்கு இடங்களில் வெடிகுண்டு இருப்பதாக நேற்று மாலை மதுராந்தகம் ரயில் நிலைய மேலாளருக்கு ஒரு கடிதம் ஒன்று வந்தது.
அந்த கடிதத்தில் கவர்னர் மாளிகை எழும்பூர் ரயில் நிலையம் மேல்மருவத்தூர் ரயில் நிலையம் போன்ற இடங்களில் சற்று நேரத்தில் நான் வைத்த வெடிகுண்டு வெடிக்கும் என எழுதப்பட்டிருந்தது. அக்கடிதத்தை கண்டு மேலாளர் அதிர்ச்சியடைந்தார். அதனையடுத்து மேலாளர் தனக்கு வந்த கடிதத்தை குறித்து ரயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக ரயில்வே போலீசார் அந்த கடிதத்தில் கூறி இருந்த தலைமைச்செயலகம் கிண்டி கவர்னர் மாளிகை மேல்மருவத்தூர் ரயில்நிலையம் போன்றவற்றில் சோதனை நடத்தினர்.
எழும்பூர் ரயில் நிலையத்திலும் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்திலும் ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் செந்தில் குமரேசன் உத்தரவின்பேரில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தினர். ஓர் இடம் விடாமல் கார் பார்க்கிங் ரயில் தண்டவாளங்கள் ரயில் பெட்டிகள் என அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தினர். இந்த வெடிகுண்டு மிரட்டலால் தலைமைச் செயலகம் மற்றும் கவர்னர் மாளிகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர சோதனை நடத்தியதில் எந்த ஒரு வெடிகுண்டை கண்டுபிடிக்கவில்லை. இது போலியான செய்தி என அறிந்து இவ்வாறு போலி கடிதம் அனுப்பி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என கண்டுபிடிக்க செங்கல்பட்டு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அவ்வாறு விசாரணை நடத்தியதில் வெடிகுண்டு விடுத்த நபர் மேல்மருவத்தூர் சேர்ந்த கங்காதரன் என்பது தெரியவந்தது. இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் என கூறினர். மேலும் அவர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.அவரை கண்டுபிடித்த பிறகு தான் மேற்கொண்டு விசாரணையில் பல உண்மைகள் தெரியவரும் என கூறுகின்றனர்.இந்த வெடிகுண்டு மிரட்டல் முதல்வருக்கு குரிவைத்ததா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.