10 நாள் ஆனாலும் வெள்ளை முடி வெளியே தெரியாது!! பத்து நிமிடத்தில் வீட்டிலிருந்தே ஹேர் டை செய்யலாம்!!
நரைமுடியை மறைப்பதற்காக மக்கள் பெரும்பாலும் பியூட்டி பார்லர் அல்லது கடைகளில் இருக்கும் ரசாயனம் மிகுந்த ஹேர் டை வாங்கி உபயோகிக்கின்றனர். ஆனால் இது நாளடைவில் தலைவலி போன்றவற்றை உருவாக்கி விடுகிறது. ஏனென்றால் இதில் வரும் ரசாயன பொருட்களாலும் வாசனையாலும் பெரும்பாலானோருக்கு அலர்ஜி ஏற்படும் சூழல் உண்டாகிறது. இதனை எல்லாம் தவிர்க்க நாம் வீட்டில் இருந்தே எளிமையான முறையில் ஹேர் டை செய்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
அவுரி இலை பொடி- 3 ஸ்பூன்
மருதாணி இலை பொடி- 2 ஸ்பூன்
எலுமிச்சை பழம்
செய்முறை:
முதலில் எடுத்து வைத்துள்ள அவுரி இலை பொடி மற்றும் மருதாணி இலை பொடி இரண்டையும் ஒன்றாக சேர்க்க வேண்டும்.
பின்பு இதனுடன் அரை எலுமிச்சைப்பழச் சாற்றை சேர்க்க வேண்டும்.
இவை மூன்றையும் ஒரு கலவை பதத்திற்கு கொண்டு வந்து இரண்டு மணி நேரம் ஊற விட வேண்டும்.
பின்பு தலைக்கு குளிக்கும் நேரத்தில் அந்த கலவையுடன் சிறிதளவு மோர் சேர்த்து தலையில் தடவிக் கொள்ள வேண்டும்.
20யில் இருந்து 25 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முடியை அலசி கொள்ளலாம்.
இவ்வாறு செய்தால் ஒரு மாதம் வரை உங்களின் நரைமுடி கருப்பாகவே காணப்படும்.