அதிபர் பதவியை விலக கோரி 1 லட்சம் பேர் போராட்டம்

Photo of author

By Parthipan K

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. பெலாரஸ் ஒரு ஐரோப்பிய நாடாகும். அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் தேர்தல் நடைபெற்றது.  26 ஆண்டுகளாக அதிபராக செயல்பட்டு வரும் அலெக்சாண்டருக்கு எதிராக போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை என எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது.
தலைநகர் மின்ஸ்க் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று திரண்ட ஏராளமான மக்கள் அதிபர் அலெக்சாண்டர் பதவி விலக்கக்கோரி கோஷங்களை எழுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சுமார் 1 லட்சம் பேர் வரை பங்கேற்றிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டக்காரர்களை தடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற பலர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைகளால் பெலாரசில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.