வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு விவகாரம்!! தொடர் இழுபறி.. மீண்டும் களத்தில் இறங்கிய அன்புமணி ராமதாஸ்!!

0
93
#image_title

வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு விவகாரம்!! தொடர் இழுபறி.. மீண்டும் களத்தில் இறங்கிய அன்புமணி ராமதாஸ்!!

கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் வன்னிய சமூக மக்களுக்காக 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கி அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது.இதன் பின்னர் தமிழகத்தில் ஆட்சியை பிடித்த திமுக அரசு இந்த 10.5% உள் இடஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியிட்டது.

அதன் பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த உள் இடஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டது.இந்த வழக்கு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் மேற்கொண்டனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் இருக்கிறது.இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.இதில் உள்ள வன்னியர் சமூகத்தினருக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கி அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இது வன்னிய சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.

இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலினை,பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் சந்தித்து வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீட்டை சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தினோம்.அவரும் இது குறித்து பேசி முடிவெடுப்பதாக தெரிவித்தார் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற சட்டம் இயற்றப்பட்டது.அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக அரசு வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது.

அதன் பிறகு நீதிமன்றத்தில் ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு தனியாக உள் ஒதுக்கீடு கொடுக்கலாம்.அதில் எந்த தவறும் கிடையது.சரியான தரவுகளை வைத்து நியாயப்படுத்தி கொடுங்கள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீட்டு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி சுயமர் ஒன்றரை ஆண்டுகாலம் ஆகிவிட்டது.ஆனால் தமிழக அரசு இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை.வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான தரவுகளை சேகரிக்க அதிகபட்சம் 15 நாட்கள் தான் ஆகும்.

ஆனால் 10 மாதங்களும் மேல் ஆகியும் தரவுகள் கிடைக்க வில்லை என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.இந்த இடைப்பட்ட காலத்தில் மருத்துவர் ஐயா ராம்தாஸ் அவர்கள் இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 6 கடிதங்கள் எழுதி இருக்கிறார்.10 முறை தொலைபேசியில் பேசி வலியுறுத்தி இருக்கிறார்.நாங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஆனாலும் இன்று வரை வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு தொடர்பான சட்டத்தை இயற்றாமல் தமிழக அரசு போக்கு காட்டி வருகிறது.இதனால் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கிடைக்குமா? என்ற சந்தேகம் தற்பொழுது எழுந்து இருக்கிறது.அதனால் தான் தற்பொழுது முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து சட்டமன்ற கூட்டத் தொடரில் வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்தியதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

Previous articleஅமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு!! மீண்டும் நெஞ்சுவலியா?
Next article5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!!! பரபரப்பாகும் தேர்தல் களம்!!!