பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 அடிப்படை சாஸ்திரக் குறிப்புகள்..!!

Photo of author

By Divya

பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 அடிப்படை சாஸ்திரக் குறிப்புகள்..!!

1)பூஜை அறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட விளக்கு ஏற்றுவது சிறப்பு. குறிப்பாக ஒரு அகல் விளக்காவது பூஜை அறையில் ஏற்றி வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் குலதெய்வத்தின் பூரண அருளை பெற்று தரும். பெண்கள் தலைவிரி கோலத்தில் விளக்கு ஏற்றக் கூடாது.

2)வீட்டில் லட்சுமி கடாச்சம் தங்க வெள்ளி அல்லது செவ்வாய் கிழமை லட்சுமி பூஜை செய்வது நல்ல விஷயம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில் பண வரவு அதிகரிக்கும். செல்வம் செழித்து இருக்கும்.

3)வெள்ளிக்கிழமை மாலையில் மகா லட்சுமி கடாச்சம் நிறைந்த பொருட்களை கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் இந்த பொருட்களை பிறருக்கு இந்த கிழமையில் கொடுக்கவும் கூடாது.

4)துடைப்பம், முரம், நகை உள்ளிட்ட பொருட்களை வெள்ளி, செவ்வாய் கிழமை அன்று பிறருக்கு கொடுக்க கூடாது.

5)வெள்ளி, செவ்வாய் அன்று நிலை வாசல் பூஜை கட்டாயம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் குல தெய்வ அருள் மட்டும் இன்றி கிரக லட்சுமியின் அருளும் கிடைக்கும்.

6)பிறரிடம் வாங்கிய கடனை கொடுக்க மைத்ரேயன் முகூர்த்தத்தில் வருகின்ற நேரத்தை முறையாக கணித்து கொடுத்தால் மீண்டும் கடன் வாங்கும் சூழல் ஏற்படாது.

7)இறைவனுக்கு நெய்வேத்தியம் வைக்கும் பொழுது நாம் செய்ய சாப்பாட்டை முழுவதும் வைத்து வணங்கி பின்னர் அதை உண்ணுவது நல்லது.

8)கடன் தீர்ந்து பணம் சேர வேண்டும் என்றால் பௌர்ணமி அன்று திருவிளக்கு வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.

9)வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் உப்பு வாங்கினால் வீட்டில் தரித்திரம் நீங்கும்.

10)பூஜை அறையில் கடவுளுக்கு ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து பின்னர் அந்த பொருளை வைத்து சமைத்து கடவுளுக்கு சமர்ப்பணம் செய்யக் கூடாது.