மாதுளம் பழத்தை உண்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்! தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!
நம் உடலுக்கு அதிக சத்துக்கள் வழங்குவதில் மாதுளைக்கு முக்கிய பங்கு உண்டு.இந்த பழத்தில் அதிகப்படியான வைட்டமின் சி சத்துக்கள் உள்ளதால் இவை நமக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை தருகிறது.இந்த பழத்தில் அடிக்கடி ஜூஸ் செய்து குடித்து வந்தோம் என்றால் உடல் ஆரோக்கியமாகவும்,வலுவாகவும் இருக்கும்.இவ்வாறு நம் உடலுக்கு பல ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இந்த பழத்தின் 10 நன்மைகள் குறித்த விவரம் இதோ.
1.மாதுளம் பழத்தில் பாலிபினோலிக் கலவைகள் நிறைந்து காணப்படுவதால் இவற்றை தினமும் சாப்பிடுவதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதை தடுத்து நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
2.மாதுளையில் உள்ள வைட்டமின் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உடலில் ஏற்படும் செரிமானக் கோளாறு,மலச்சிக்கல்,மூல நோய்,பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்ட பல பாதிப்புகளை குணப்படுகிறது.
3.இந்த பழத்தில் உள்ள வைட்டமின் சி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
4.தினமும் மாதுளை சாப்பிடுவதால் சிறுநீரக கற்கள் உருவாகாமல் இருக்கும்.மாதுளையின் சாறு இரத்தத்தில் கால்சியம்,பாஸ்பேட் மற்றும் ஆக்சலேட்டுகளின் செறிவைத் தடுக்க உதவுகிறது.
5.இந்த பழத்தில் எலாகிடானின்ஸ் என்ற சேர்மம் நிறைந்துள்ளது.இது பார்கின்சன் மற்றும் அல்சைமர் நோயிலிருந்து மூளையைப் பாதுகாக்க உதவுகிறது.
6.இந்த மாதுளை பழம் உடலில் ஏற்படும் அழற்சியைத் தடுக்க உதவுகிறது.
7.மாதுளையில் ஜூஸ் செய்து குடித்து வருவதன் மூலம் ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.
8.இந்த பழத்தில் அதிகளவு ஆன்டிவைரல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்து காணப்படுவதால் இவற்றை உண்பதன் மூலம் பல்வேறு வைரஸ் தொற்றுகள் மற்றும் பல நோய்களில் இருந்து உடலை காத்து கொள்ள முடியும்.
9.இந்த பழத்தின் சாறு இரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.
10.இந்த பழத்தை உண்பதால் நம் உடலில் ஏற்படும் சோர்வு தன்மை நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.