அதிர்ச்சி சம்பவம் காரில் கிடந்த 10 பிணங்கள்! காரணம் யார்? நடந்தது எப்படி?

Photo of author

By Parthipan K

அதிர்ச்சி சம்பவம் காரில் கிடந்த 10 பிணங்கள்! காரணம் யார்? நடந்தது எப்படி?

Parthipan K

அதிர்ச்சி சம்பவம் காரில் கிடந்த 10 பிணங்கள்! காரணம் யார்? நடந்தது எப்படி?

வடஅமெரிக்க நாடான மெக்சிகோவின் மத்திய பகுதியில் உள்ள கவர்னர் அலுவலகத்துக்கு அருகே சொகுசு கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார்  அந்த காரை சோதனை செய்தனர்.

அந்த காரை சோதனை செய்து பார்த்ததில் அந்த காருக்குள் 10 பேர் பிணமாக கிடந்தனர். இதை பார்த்த போலீசார் அதிர்ந்து போயினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த 10 சடலங்களின் உடல்களிலும் துப்பாக்கி குண்டு காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சந்தகத்திற்கு உரிய இரு நபர்களை மெக்ஸிகோ போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த காரை ஒரு நபர் ஓட்டி சென்றதாகவும், பின்னர் அந்த காரை அங்கு நிறுத்தி விட்டு ஒரு சந்து வழியாக அந்த நபர் சென்றதாகவும் கூறப்படுகிறது.

சமீபகாலமாக சில ஆண்டுகளாக சினாலோவா மற்றும் ஜாலிஸ்கோ என்னும் இரண்டு இயக்கங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் போரால் மாநிலம் பரபரப்பான சூழ்நிலையில் உள்ளது எனவும் இந்த இரண்டு இயக்கங்களும் போதை பொருள் கடத்தல் சம்பந்தமாக போராடி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

எனவே மெக்சிகோவில் காரில் 10 பேர் பிணமாக கிடந்த சம்பவத்தில், இந்த இரு இயக்கங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.