தன்னை விட வயதில் பெரிய பெண்ணை கல்யாணம் செய்த 10 திரை நட்சத்திரங்கள்!! அட இவருமா இந்த லிஸ்ட்ல இருக்காரு!

0
46

தன்னை விட வயதில் பெரிய பெண்ணை கல்யாணம் செய்த 10 திரை நட்சத்திரங்கள்!! அட இவருமா இந்த லிஸ்ட்ல இருக்காரு!

நம் தாத்தா,பாட்டி காலத்தில் ஆண்கள் தங்களை விட 5 முதல் 10 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்வது என்பது நடைமுறையாக இருந்தது.அதையடுத்து நம் அப்பா காலத்தில் ஆண்கள் தங்களை விட 2 முதல் 3 வயது குறைவான பெண்ணை செய்தனர்.இந்நிலையில் தற்பொழுது இந்த நடைமுறைகளை தகர்த்து ஆண்கள் தன்னை விட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள அதிகம் விருப்பம் காட்டி வருகின்றனர்.இதற்கு திரைப் பிரபலங்கள் மட்டும் விதி விலக்கு அல்ல.

மேலும் தன்னை விட பெரிய பெண் அதிக பக்குவம் கொண்டவளாக இருப்பாள்.இதனால் புரிதல் ஏற்பட்டு தங்களுக்குள் சண்டை என்ற ஒன்று உருவாகாது உள்ளிட்ட பல காரணங்கள் ஆண்கள் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது.இந்நிலையில் காதலுக்கு அழகு முக்கியம் இல்லை என்பது போல் வயதும் ஒரு பொருட்டில்லை என்று தன்னை விட மூத்த பெண்ணை திருமணம் செய்த 10 பிரபலங்களின் பட்டியல் இதோ.

1.தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை,நடிகர் தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

இந்நிலையில் தனுஷ் தன் மனைவியை விட இரண்டு வருடம் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2.விஜய்

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் ஹீரோவாக இருக்கும் இளைய தளபதி விஜய் அவர்கள் சங்கீதா என்பவரை கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.

இந்நிலையில் விஜய் தன் மனைவியை விட இரண்டு வருடம் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3.யாஷ்

கன்னடத்தில் கேஜிஎப் என்ற தரமான பிளாக் பஸ்டர் படத்தின் மூலம் நன்கு அறியப்பட்ட யாஷ் அவர்கள் தன்னுடன் இணைந்து நடித்த ராதிகாவை காதலித்து கடந்த 2016 ஆம் ஆண்டு மணம் முடித்தார்.

இந்நிலையில் யாஷ் தன் மனைவியை விட இரண்டு வருடம் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

4.மகேஷ் பாபு

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அவர்கள் நம்ரதா ஷிரோத்கர் என்பவரை கடந்த 2005 ஆம் ஆண்டு கல்யாணம் செய்து கொண்டார். இந்நிலையில் மகேஷ் பாபு தன் மனைவியை விட நன்கு வருடம் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

5.விஷ்ணு விஷால்

தமிழில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள்
தன் முதல் மனைவி ராஜினி நட்ராஜ் என்பவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ஓய்வு பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை கடந்த 2021 ஆம் ஆண்டு மணம் முடித்தார். இந்நிலையில் விஷ்ணு விஷால் தன் மனைவியை விட ஒரு வருடம் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

6.அபிஷேக் பச்சன்

பாலிவுட்டின் பழம் பெரும் நடிகர் அமிதாப் பச்சன் அவர்களின் மகன் அபிஷேக் பச்சன் அவர்கள் முன்னாள் உலக அழகியும்,நடிகையுமான ஐஸ்வர்யாவை காதலித்து கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் அபிஷேக் பச்சன் தன் மனைவியை விட இரண்டு வருடம் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

7.ஷில்பா செட்டி

பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஷில்பா செட்டி தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.இவர் ராஜ் குந்தரா என்ற தொழிலதிபரை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் ஷில்பா செட்டி தன் கணவரை விட மூன்று மாதங்கள் பெரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

8.பிரசன்னா

தமிழில் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் பிரசன்னா.இவர் தமிழ் திரையில் முகம் பிரபலமான நடிகையான புன்னகை அரசி என்று புகழப்படும் சினேகாவை காதலித்து கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் பிரசன்னா தன் மனைவியை விட ஒரு வருடம் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

9.விக்ரம்

தமிழ் திரையுலகில் வளர்ந்த நடிகர்களில் ஒருவராக இருக்கும் விக்ரம் அவர்கள் சைலஜா பாலகிருஷ்ணன் என்பவரை கடந்த 1992 ஆம் ஆண்டு கல்யாணம் செய்து கொண்டார். இந்நிலையில் விக்ரம் தன் மனைவியை விட 6 வருடம் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

10.சைப் அலிகான்

பாலிவுட்டில் நன்கு பேமஸ் ஆன நடிகர் சைப் அலிகான் முதலாவதாக அம்ரிதா சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.தன் மனைவி அம்ரிதா சிங்கை விட 13 வருடம் இளையவர் சைப் அலிகான்.பின்னர் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையான கரீனா கபூரை
கடந்த 2012 ஆம் ஆண்டு மணம் முடித்தார்.