ஸ்டூடியோவில் சண்டைப்போட்டுக்கொண்ட யேசுதாஸ் – தேவா ; வெளியான தகவல்!

0
95

ஸ்டூடியோவில் சண்டைப்போட்டுக்கொண்ட யேசுதாஸ் – தேவா ; வெளியான தகவல்!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளரும், பாடகருமான தேவநேசன் சொக்கலிங்கம் என்ற தேவா. இவர் கனா பாட்டுக்கு பெயர் போனவர். கடந்த 36 ஆண்டுகளாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில, 400க்கும் மேற்பட்ட படங்களில் இவர் இசையமைத்துள்ளார்.

சிறு வயது முதலே தேவாவிற்கு இசை மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. சந்திரபோஸுடன் இணைந்து பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். லண்டனில் உள்ள டிரினிட்டி இசைக் கல்லூரியில் மேற்கத்திய இசைப் பாடத்தை முடித்திருக்கிறார்.

இளையராஜாவிற்கும், தேவாவிற்குமே கடுமையான போட்டி நிலவியது. கிட்டத்தட்ட ரஜினியின் எல்லா பட டைட்டிலிலும் இவர் இசையே ஒலித்தது.

இந்நிலையில், இசையமைப்பாளர் தேவா ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில், பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

நான் ஒரு படத்தில் இசையமைக்க சென்றிருந்தேன். அப்போது, அப்படத்தில் பாட பாடகர் யேசுதாஸ் வந்திருந்தார். அப்போது, அவர் ஒரு கவிஞர் வரிகளை சொல்ல, சொல்ல அவர் எழுதிக்கொண்டிருந்தார்.

அப்போது, ஒரு வார்த்தையை அவர் தவறாக எழுதிவிட்டார். கவிஞர் அந்த வார்த்தைய மீண்டும் மீண்டும் அழுத்தமாக சொன்னதும், யேசுதாஸிற்கு கோபம் வந்துவிட்டது. உடனே அந்த கவிஞரைப் பார்த்து வெளியே எழுந்துபோ என்று சத்தமிட்டார். உடனே  தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரன் ஓடி வந்து சமாதானப்படுத்தினார்.

நான் சுருதி என்னென்னுன்னு சொல்லிக்கொண்டிருக்கும்போது, யேசுதாஸ் அதை பின்தொடர்ந்து பாடினார். அப்போது, அன்பாலயா யேசுதாஸ் பாடும்போது திருத்தியிருக்கிறார். உடனே யேசுதாஸ் கோபத்தில் ஏய் நீ யாரு… நான் பாடும்போது திருத்திருக்கொண்டே இருக்க என்று கூச்சல்போட்டார்.

அதற்கு அன்பாலயா  தயாரிப்பாளர் என்று சொல்லாமல், நான் தேவாவின் உதவியாளர் என்று கூறிவிட்டார். உடனே, யேசுதாஸுக்கும், அன்பாலயாவிற்கும் பயங்கரமான சண்டை வெடித்தது. கோப உச்சத்தில் யேசுதாஸ் எல்லா பொருளையும் தூக்கி எறிய, நான் ஹார்மோனியத்தை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.

இதன் பின்னர் என் இசையில் யேசுதாஸ் கிட்டத்தட்ட 6 வருடங்களாக பாடவே இல்லை. நான் எவ்வளவோ அழைத்து பார்த்தேன். வரவே மாட்டேன்னு சொல்லிவிட்டார். அவர் சின்ன சின்ன விஷயத்தில்கூட டென்சனாகி விடுவார். சென்சிட்டிவான மனிதன் என்று அந்தப் பேட்டியில் தேவா பேசியிருந்தார்.

author avatar
Gayathri