Middle Class Family பணம் சேமிக்க 10 எளிய வழிகள்!!
1)முதலில் பணம் சேமிக்க வங்கி அல்லது போஸ்ட் ஆபிஸில் சேமிப்பு கணக்கு ஒன்றை தொடங்குங்கள். பின்னர் சம்பளம் வந்ததும் அதில் இருந்து குறைந்தது 10% பணத்தை சேமிப்பு கணக்கில் போட்டு விடவும். எக்காரணத்தைக் கொண்டும் இந்த சேமிப்பு பணத்தை எடுக்கவே கூடாது. தொடர்ந்து இவ்வாறு சேமித்து வருவதன் மூலம் நகை, வண்டி, நிலம், வீடு உள்ளிட்டவைகள் வாங்க பெரிதும் உதவியாக இருக்கும்.
2)நீங்கள் பார்க்கும் வேலையில் ஓவர் டைம் அல்லது வேறு ஏதேனும் பார்ட் டைம் ஜாப் பார்த்து பணம் சம்பாதிக்கலாம். அப்படி சம்பாதிக்கும் பணத்தை அந்த சேமிப்பு கணக்கில் போட்டு வைக்கவும்.
3)ஒரு சிலருக்கு புது ரூபாய் தாள் சேமிக்கும் பழக்கம் இருக்கும். அந்த வகையில் புது ரூபாய் தாள்களை சேமிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலமும் பணம் சேமிக்க முடியும்.
4)நம் பிறந்த நாள், கல்யாண நாள், பண்டிகை நாட்களில் பெரியவர்கள் நமக்கு கொடுக்கும் கிப்ட் அமௌண்ட்டை ஒரு உண்டியலில் சேர்த்து வைப்பதினால் நிறைய பணம் சேமிக்க முடியும்.
5)எல்பிஜி சப்சிடி நமது வங்கி சேமிப்பு கணக்கில் போடப்படும். அந்த பணத்தை எடுத்து நாம் பணம் சேமிப்பதற்காக தொடங்கிய வங்கி கணக்கில் செலுத்தி சேமிக்கவும்.
6)தினமும் நாம் வேலைக்கு சென்று வருவதினால் நம்மிடம் சில்லறை காசுகள் அதிகம் இருக்கும். பேருந்து பயணம், ஆட்டோ பயணம் மேற்கொள்ளும் பொழுது ரூபாய் தாளை கொடுத்து மீதம் சில்லறை கிடைக்கும். அந்த சில்லறை காசுகளை உண்டியலில் சேமித்து வரலாம்.
7)வீட்டில் பழைய பொருட்கள், செய்தித் தாள், பால் கவர் இருந்தால் அதை எடைக்கு போட்டு வரும் பணத்தை உண்டியலில் போட்டு சேமிக்கலாம்.
8)வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க செல்லும் முன்பு எடுத்து செல்லும் பணத்தில் சிறிய தொகையை உண்டியலில் போட்டு விட்டு செல்லவும். இவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு தேவையான பொருட்கள் வாங்க மட்டுமே கையில் பணம் இருக்கும். இதனால் அதை மட்டுமே வாங்குமோ. தேவை இல்லாத செலவுகளை நாம் செய்ய மாட்டோம்.
9)சம்பளம் வந்ததும் அவசர தேவைக்கு என்று சிறு தொகையை ஒதுக்கி விடவும். அந்த மாதத்தில் எந்த ஒரு அவசரத் தேவையும் ஏற்படவில்லை என்றால் அந்த பணத்தை உண்டியலில் போட்டு சேமிக்கவும்.
10)EB பில் கட்டுதல், மொபைல் ரீஜார்ஜ் உள்ளிட்டவைகளை ஆன்லைன் ஆப் மூலம் செய்வதினால் கேஸ் பாக் கிடைக்கும். அந்த அமௌண்ட்டை உங்கள் சேமிப்பு வங்கி கணக்கிற்கு மாற்றி சேமிக்கலாம்.