அரசின் 1000 ரூபாய் உங்கள் அக்கவுண்டுக்கு இன்னும் வரவில்லையா!! உடனே இதை செய்யுங்கள்!!
திமுகவானது ஆட்சிக்கு வந்தால் மகளிர்க்கு ஒரு ஆயிரம் வழங்குவதாக தெரிவித்திருந்த நிலையில் அது குறித்து முதலில் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதனால் எதிர் கட்சி என தொடங்கி பலரும் இந்த ஆயிரம் வழங்குவது குறித்து கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர்.
இவ்வாறு பல சர்ச்சைகளுக்கு இடையில் கலைஞர் உரிமைத்தொகை திட்டமானது அண்ணா பிறந்தநாள் அன்று வழங்க உள்ளதாக கூறினர். அத்தோடு அதற்கான செயல்பாடுகளையும் தொடங்கினர்.இந்த ஆயிரம் ரூபாய் பெறுபவர்கள் 300 யூனிட் மின்சாரத்திற்கு கீழ் உபயோகித்திருக்க வேண்டும்,வறுமை கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்தனர்.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் பெண்களுக்கு மத்தியிலும் அதிருப்தி நிலவியது. தற்பொழுது அண்ணா பிறந்தநாள் அன்று கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். இதில் ஒரு கோடியே ரூ 6 லட்சம் பேருக்கு ஆயிரம் ரூபாய் ஆனது அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருவதாக கூறினார்.
இதில் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான தகுதி பெற்றும் பலரது வங்கி கணக்கிற்கு பணம் வராமல் இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் அவர்களின் ஊர்களின் நடக்கும் முகாம்களில் கலந்து கொண்டு இது குறித்து மேல்முறையீடு செய்யலாம். மேற்கொண்டு தாங்கள் அளித்த படிவத்தில் வங்கி கணக்கு ஏதேனும் தவறாக உள்ளதா என்பதையும் சரி பார்த்துக் கொள்ளலாம்.
அவ்வாறு தவறான வங்கி கணக்கு கொடுக்கப்பட்டிருந்தால் அதனை உடனடியாக மாற்றிக் கொள்ளலாம். இந்த முகாம்கள் அந்தந்த ஊருக்கு ஏற்ப குறிப்பிட்ட தேதியில் நடைபெறும். இது குறித்து விவரங்களையும் தமிழக அரசானது வெளியிட்டுள்ளது. இவ்வாறு ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு தகுதி பெற்றும் பணம் கிடைக்காதவர்கள் வரும் 30 நாட்களுக்குள் இது குறித்து முறையிட்டு இதற்கான தீர்வை பெற்றுக் கொள்ளலாம்.
அவ்வாறு மேல் முறையீடு செய்யப்படும் படிவங்கள் அனைத்திற்கும் கள ஆய்வு செய்யப்படும். பின்பு தகுதியானவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.