1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை!!! மேல் முறையீடு செய்வதற்கு கடைசி நாள் எது!!?

Photo of author

By Sakthi

1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை!!! மேல் முறையீடு செய்வதற்கு கடைசி நாள் எது!!?

பெண்களுக்கு 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு மேல்முறையீடு செய்வதற்கான கடைசி தேதி குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.

தமிழகத்தில் திமுக கட்சி தலைமையில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திமுக கட்சி வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக தலைமையிலான தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் செயல்படுத்தியது.

இந்த திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாய் பெறுவதற்கு சுமார் 1.63 கோடி பெண்கள் விண்ணப்பம் அளித்த நிலையில் அதில் ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 பேர் தகுதியுள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள். இவர்கள் அனைவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 15 தேதியில் முதல் மாத மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

இதையடுத்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டதற்கு உண்டான காரணத்தை குறுஞ்செய்தி ஒன்று மூலமாக அவர்களின் கைபேசிக்கு தகவலாக அனுப்பப்பட்டது. இந்த குறுஞ்செய்தி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மகளிர் அனைவருக்கும் செப்டம்பர் மாதம் 18ம் தேதிமுதல் அனுப்பப்பட்டு வருகின்றது.

இதையடுத்து மகளிர் உரிமை தொகைக்கு மீண்டும் விண்ணப்பம் அளிக்க எஸ்.எம்.எஸ் வந்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இசேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது . ஆனால் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு நாளில் குறுஞ்செய்திகள் வந்ததால் எது கடைசி நாள் என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து கடைசி நாள் எது என்பது பற்றிய குழப்பத்தை அதிகாரிகள் தீர்த்து வைத்துள்ளனர்.

இது குறித்து சிறப்பு திட்ட செயல்துறை அதிகாரிகள் “விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக எப்பொழுது உங்கள் கைபேசிக்கு எஸ்.எம்.எஸ் வந்ததோ அன்றைய தினத்தில் இருந்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து விண்ணப்பிக்கலாம். அதாவது உதாரணமாக உங்கள் கைபேசிக்கு செப்டம்பர் 20ம் தேதி நிராகரிக்கப்பட எஸ்.எம்.எஸ் வந்திருந்தால் அன்றிலிருந்து 30 நாட்கள் அதாவது அக்டோபர் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது எஸ்.எம்.எஸ் வந்த நிலைப் பொறுத்து மாறுபடும்” என்று கூறியுள்ளனர். இது வரை 9.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு மேல்முறையீடு செய்துள்ளனர்.