சேலம் அருகே குடும்பத் தகராறில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி?

Photo of author

By Parthipan K

சேலம் அருகே குடும்பத் தகராறில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி?

சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள குமரகிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன் இவருக்கு வயதுக்கு 34. இவருக்கும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் புவனாஸ்ரீ.

இவர்கள் இருவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மூன்று வயது மகன் உள்ளான். இவர் அருகிலுள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். சசிதரன் வீட்டிலிருந்தபடியே ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை கவியுகனை பள்ளிக்கு அனுப்புவதற்காக தயார்படுத்திக் கொண்டிருந்தார் புவனாஸ்ரீ. இந்நிலையில் பள்ளிக்கு தாமதமானதால் சசிதரனுக்கும் அவரது மனைவி புவனாஸ்ரீக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் சசிதரன் புவனாஸ்ரீயை கடுமையான சொற்களால் பேசியுள்ளார். இதில் மனமுடைந்த புவனாஸ்ரீ ஒரு அறைக்குள் சென்று தொட்டில் கட்டும் கம்பியில் சேலையை மாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த சசிதரன் உடனே புவனாஸ்ரீ கீழே இறக்கி அம்மாபேட்டை கடலூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

அங்க புவனாஸ்ரீ உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. சாதாரண சண்டைக்காக உயிரை மயக்க சென்ற மனைவி.