விமானம் தரையிறங்க டிஸ்டர்ப் ஆக இருக்கும் 140 வீடுகள்!! உடனே அதனை நீக்க நோட்டீஸ்!!

Photo of author

By Rupa

விமானம் தரையிறங்க டிஸ்டர்ப் ஆக இருக்கும் 140 வீடுகள்!! உடனே அதனை நீக்க நோட்டீஸ்!!

Rupa

140-houses-will-be-disturbed-by-the-plane-landing-notice-to-remove-it-immediately

விமானம் தரையிறங்க டிஸ்டர்ப் ஆக இருக்கும் 140 வீடுகள்!! உடனே அதனை நீக்க நோட்டீஸ்!!

காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம் அருகே விமான நிலையம் ஒன்று உள்ளது. விமான நிலையத்தில் தரையிறங்க அருகில் இருக்கும் 140 வீடுகளில் உயரம் இடையூறாக இருப்பதாக பல நாட்கள் புகார்கள் எழுந்து வந்துள்ளது. வீடுகளில் உயரம் குறைத்தால் மட்டுமே பாதுகாப்பான முறையில் விமானத்தை தரையிறக்கம் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

எனவே இதனையொட்டி கொளப்பாக்கம் ஊராட்சியில் உள்ள 140 வீடுகளில் உயரத்தை குறைக்குமாறு விமான நிலையம் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடுகளும் அதற்கேற்ற அளவிற்கு உயரத்தை குறைத்தால் போதுமானது என்று கூறியுள்ளனர்.

அதனால் கொளப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மூலம் இது குறித்து உடனடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விமானம் தரையிறங்க இடையூறாக இருக்கும் 140 வீடுகளில் உயரங்கள் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு வீட்டின் இடத்திற்கு ஏற்றார் போல் ஐந்து மீட்டரில் இருந்து 7 மீட்டர் வரை உயரம் குறைக்க வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். திடீரென வீடுகளில் உயரத்தை குறைக்க நோட்டீஸ் அனுப்பியதால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.