144 தடை உத்தரவு கட்டாயம் போடப்படும்! எந்த ஊரில் தெரியுமா?  

Photo of author

By Parthipan K

144 தடை உத்தரவு கட்டாயம் போடப்படும்! எந்த ஊரில் தெரியுமா?  

Parthipan K

144 தடை உத்தரவு கட்டாயம் போடப்படும்! எந்த ஊரில் தெரியுமா?

கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில்.தற்போது அதே போன்று பல்வேறு நோய் தொற்றுகள் அதிகரித்து வருகிறது. கொரோனா போன்ற புதிய வகை வைரஸ்கள் கண்டறியப்பட்டு வருகிறது. இதனையடுத்து காலரா, குரங்கம்மை போன்ற நோய்களும் அதிகரித்து வண்ணம் உள்ளது.

இந்நிலையில் நேபாளத்தில் சிலருக்கு காலரா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நேபாளத்தில் உள்ள காத்மாண்டு என்ற பகுதியில் 12 பேருக்கு காலரா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இந்த         தொற்றானது சுகாதாரமற்ற நீரில்                உருவாகும் ஒரு வகை பாக்டீரியா         தீநுண்மியால் உருவாவது தான் இந்த காலார நோய்.

இந்த நோய்                தொற்று ஏற்பட்டால் கடும்       வயிற்றுப்போக்கு ஏற்படும்.இதன் மூலம் உடம்பில் உள்ள நீர்ச்சத்து அனைத்தும் போகச் செய்யும். இந்த காலரா தொற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் விட்டால் ஆரோக்கியமற்றவர்கள் மரணமடைய கூடும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் நேபாளத்தில் பன்னிரண்டு பேருக்கு காலரா தொற்று உறுதியாகிய நிலையில் தற்போது காரைக்காலிலும் கலரா தொற்று சிலருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது அதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் 144 தடை உத்தரவு போடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.