இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்த 15 மீனவர்கள்!! இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு!!

0
117
15 fishermen freed by the Sri Lankan court!! Handover to Indian Navy!!
15 fishermen freed by the Sri Lankan court!! Handover to Indian Navy!!

இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்த 15 மீனவர்கள்!! இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு!!

தமிழ்நாட்டில் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றனர். தமிழக மீனவர்கள் ஆண்டாண்டு காலமாக இலங்கை கடற்படையினால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.

இதில் கச்சத்தீவு தமிழ்நாட்டிற்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மீன் பிடிப்பதையே தொழிலாக கொண்டுள்ள மீனவர்கள் பலர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கபடுகின்றனர்.

இவ்வாறு சிறை பிடிக்கப்படும் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் எப்பொழுதும் அச்சத்தையும் ,கவலையும் தருகின்றது.இப்படி மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் படகுகளை பறித்து கொண்டு அவர்களை அச்சுர்த்துவது மற்றும் நாடுகளில் வைத்து தாக்குவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே உள்ளது

மேலும் அவர்களை சிறை பிடிப்பது ,துப்பாக்கி சூடு நடத்துவது போன்ற பல கொடுமைகளை இலங்கை கடற்படையினர் அரங்கேற்றி கொண்டே வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் மட்டும் மீன்பிடிக்க சென்ற தமிழக மக்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீன்பிடிக்க கொண்டு சென்ற படகுகள் மற்றும் வைத்திருந்த பொருட்கள் போன்ற அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

அதன் பிறகு இலங்கை நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு 15 மீனவர்களும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.மேலும் இனி எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்தால் சிறை தண்டை அளிக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.

இதனை தொடர்ந்து இன்று இந்தியா வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங் கைது செய்யப்பட்ட 15 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறினார்.

Previous articleஆந்திராவில் பெய்த மீன் மழை! ஆச்சரியத்தில் உறைந்த கிராம மக்கள்!!
Next articleபள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை!! அறிவித்த மாவட்ட ஆட்சியர்!!