ஆந்திராவில் பெய்த மீன் மழை! ஆச்சரியத்தில் உறைந்த கிராம மக்கள்!!

0
53

ஆந்திராவில் பெய்த மீன் மழை! ஆச்சரியத்தில் உறைந்த கிராம மக்கள்!!

 

ஆந்திரா மாநிலத்தில் கிராமம் ஒன்றில் திடீரென்று வானில் இருந்து மீன்கள் விழுந்ததால் அந்த கிராம மக்கள் அனைவ aquatic environmentரும் ஆச்சரியத்தில் உறைந்தனர். மேலும் வானில் இருந்து விழுந்த மீன்களை மக்கள் அள்ளிச் சென்றனர்.

 

நாம் இதுவரை பார்த்தது ஆலங்கட்டி மழை அதாவது ஐஸ் கட்டி மழை பார்த்திருப்போம். சாதாரண மழை பாத்திருப்போம். ஆனால் மீன் மழை பெய்தது என்று கேள்விப் பட்டிருப்போம். ஏற்கனவே அமேரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் மீன் மழை பெய்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவிலும் ஒரு முறை மீன் மழை பெய்துள்ளது. தற்பொழுது அந்த மீன் மழை இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் பெய்துள்ளது.

 

இந்த மீன் மழை எவ்வாறு பெய்கிறது என்றால் ஏரி அல்லது குளங்கள் மீது நீர்தாரை ஏற்படும். அதாவது நீர் சுழற்சி ஏற்படும். அந்த சமயம் மீன்கள் அந்த நீர் சூழற்சியின் மூலமாக உள்ளிழுக்கப்படுகிறது. மேலும் நீர் தாரை ஏற்படும் பொழுது அதிக காற்று அடிக்கும். அப்பொழுது அந்த மீன்கள் நீர் சுழற்சியில் மீன்கள் பறக்கத் தொடங்கும். நீர் சுழற்சியின் காற்றின் வேகம் குறைந்ததும் மீன்கள் கீழே விழத் தொடங்கும். இப்படி மீன்கள் விழுவதே மீன்கள் மழை பெய்வது போல தோன்றுகின்றது. தற்பொழுது இதே போல இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

 

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வஜ்ரபு கொட்டேரு மண்டலம், வஜ்ரபு கோனேரு, பூபால பள்ளி, காளிஸ்வரி நகர், சாஸ்திரி நகர், சுல்தானாபாத், மகாதேவ்பூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த கனமழையுடன் மீன்கள் மழையும் பெய்துள்ளது. 100 நாள் வேலைக்கு சென்ற பெண்கள் வானத்தில் இருந்து மீன்கள் விழுந்ததையும் மீன்கள் சாலையில் உயிருடன் ஊர்ந்ததையும்  ஆச்சரியமாக பார்த்துவிட்டு மீன்களை தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சொன்றனர்.

 

இதைப் போலவே வஜ்ரபு கோனேரு பகுதியில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்திலும் மீன்கள் மழையாக வீழ்ந்துள்ளது. பொதுமக்களும் பக்தர்களும் நீ நான் என்று போட்டி போட்டுக் கொண்டு மீன்களை அள்ளி சென்றனர்.

 

வானத்தில் இருந்து மீன்கள் மழையாக பொழிவது இதுவே முதல் முறை என்று ஸ்ரீகாகுளம் மாவட்ட பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் பலரும் தங்களது செல்போன்களில் மீன்கள் மழையை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.