மகாராஷ்டிராவின் உல்ஹாஸ்நகர் ரயில் நிலையப் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் வெள்ளிக்கிழமை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சனிக்கிழமை காலை வரை அந்தப் பெண்ணை எங்கும் போகாமல் சிறை பிடித்து வைத்து, கொடுமை செய்த சம்பவம் தான் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி இரண்டு காவல் நிலையங்கள் அவரது புகாரைப் பதிவு செய்ய மறுத்ததை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு, 15 வயது சிறுமி உல்லாஸ்நகர் நிலைய வளாகத்தில் ஸ்ரீகாந்த் கெய்க்வாட் என்ற தாதாவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.குற்றம் சாட்டப்பட்டவர் உல்ஹாஸ்நகரில் வசிப்பவர் மற்றும் அவருக்கு எதிராக தானேயில் பல வழக்குகள் பதிவு பதிவு செய்யப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. குற்றவாளி சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டு உள்ளான்.
ரயில்வே போலீஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, குற்றவாளி சிறுமியையும் அவளது இரண்டு நண்பர்களையும் உல்ஹாஸ்நகர் ரயில் நிலைய ஸ்கைவாக்கில் பார்த்து உள்ளான். அவன் அவர்களை அச்சுறுத்தி உள்ளான், பின்னர் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
அந்த சிறுமியுடன் அவளது இரண்டு நண்பர்கள் இருந்துள்ளனர். ஆனால் அவன் சுத்தியல் போன்ற தடியை கையில் வைத்திருந்ததை பார்த்து பயந்து அவர்கள் ஓடி உள்ளனர். பின்னர் அந்த தாதா அந்த சிறுமியை ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஒரு பாழடைந்த கட்டமைப்பிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் சிறுமியை செய்துள்ளான் “என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து இது மட்டுமில்லாமல் அந்த சிறுமியை பலமாக அடித்துள்ளான். மேலும் விடியும் வரை அவளை வெளியே விடாமல் துன்புறுத்தி உள்ளான். காலையில் அந்த சிறுமி எழுந்து பார்த்ததும் அருகில் யாரும் இல்லாததை உணர்ந்து அங்கிருந்து தப்பித்து உள்ளாள். தப்பித்து வெளியே சென்று வழியில் சென்ற ஒரு நபரிடம் செல்போனை வாங்கி தனது குடும்ப நபருக்கு போன் செய்து விவரத்தை சொல்ல அனைவரும் அதிர்ந்து உள்ளனர்.பின் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க குறைந்தது இரண்டு காவல் நிலையத்தில் அந்த பெண்ணின் புகாரை ஏற்கவில்லை.
என்று கூறப்படுகிறது. பின் குற்றவாளியை கைது செய்து IPC மற்றும் POCSO சட்டத்தின் கீழ் தொடர்புடைய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி, குற்றம் சாட்டப்பட்டவனால் வலுக்கட்டாயமாக வைக்கப்பட்டிருந்த வளாகத்தை விட்டு வெளியேறி, சம்பவத்தை சொல்லி புகாரை பதிவு செய்ய மணிக்கணக்கில் சுற்றித்திரிந்து உள்ளார். யாரும் வழக்கை ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
“இரவு 12: 30-12: 45 மணியளவில் அவள் எங்களிடம் வந்தாள், நாங்கள் உடனடியாக வழக்கைப் பதிவு செய்தோம்,” என்று ஒரு ரயில்வே அதிகாரி கூறி உள்ளார்.