அரசு பள்ளியை சேர்ந்த 150 மாணவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!! மீதமுள்ளவர்களுக்கு ஏற்பட்ட அடுத்தடுத்த அறிகுறி!

0
182
150 government school students from the same school admitted to the intensive care unit!!
150 government school students from the same school admitted to the intensive care unit!!

அரசு பள்ளியை சேர்ந்த 150 மாணவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!! மீதமுள்ளவர்களுக்கு ஏற்பட்ட அடுத்தடுத்த அறிகுறி!

சமீப காலமாக மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறித்து பல செய்திகள் வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாநகராட்சி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் 1300 க்கும் மேற்பட்ட மாணவர் மற்றும் மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று மதியம் உணவு வேலைக்கு பிறகு அங்கு படித்து வரும் பல மாணவர் மற்றும் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே பள்ளி நிர்வாகம் 108க்கு அழைப்பு விடுத்து இவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றது. மீதமுள்ள மாணவர்களுக்கும் இவ்வாறு அறிகுறிகள் ஏற்பட்ட நிலையில் அவர்களையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அனுமதித்த மாணவர்களை விசாரித்தனர். அதில் இவர்களுக்கு வித்தியாசமான வாடை வந்ததாக கூறியுள்ளனர். அதன் பிறகு தான் தங்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். மேலும் பிற மாணவர்களை அருகிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து சென்று எலக்ட்ரோலைட் பானங்கள் வழங்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் மாணவர்களுக்கு ஏன் இவ்வாறு வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்கும் என்று பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பள்ளி வளாகத்தில் இருக்கும் செப்டிக் டேங்கில் இருந்து ஏதேனும் விஷவாயு கசிந்து இருக்குமா என்ற அடிப்படையில் விசாரணை செய்தனர். ஆனால் அவ்வாறான எந்தவித விஷ வாயு கசியவில்லை. இதற்கு அடுத்த கட்டமாக மாணவர்கள் உண்ட சாப்பாடு தான் இதற்கு காரணமா? என்று பாணியில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்பொழுது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 150 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Previous articleஇனி 4ஜி ஃபோன்கள் விற்பனை நிறுத்தம்! விளக்கம் அளிக்கும் மத்திய அரசு!
Next articleஉலகக் கோப்பையில் பூம்ராவுக்கு பதில் இவர்தான்… அறிவித்தது பிசிசிஐ!