அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1500!!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!
தமிழக அரசு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மாதம்தோறும் 1500 கிடைக்கும் வகையில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் இடையே தமிழ் மொழி இலக்கியம் குறித்த ஆர்வம் அதிகரிக்கும். அந்த நோக்கில் தான் இத்திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த 1500 உதவித்தொகையைப் பெற தமிழ் மொழி இலக்கியம் திறனறிவு தேர்வு எழுத வேண்டும். இதை எழுதி தேர்ச்சி பெறுபவர்களுக்கு 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை மாதம் தோறும் 1500 வழங்கப்படும்.
அந்த வகையில் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கியத்தின் மேல் படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். இந்த ஆண்டு முதல் இது நடைமுறைப்படுத்தப்பட்டதால் பதினொன்றாம் படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தனர். இந்த தேர்வு இன்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. கிட்டத்தட்ட ரெண்டு லட்சத்து 67 ஆயிரம் மாணவ மற்றும் மாணவிகள் இத்தேர்வை எழுத உள்ளனர். இன்று காலை 10 மணிக்கு தொடங்க உள்ள இந்த தேர்வானது மதியம் 12 மணிக்கு முடியும்.
மேலும் இத்தேர்வு எழுதுவதற்கு பல விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர். தேர்வாளர்கள் தேர்வை எழுதி முடித்தாலும்,தேர்வு நேரம் முடியும் வரை அறையை விட்டு வெளியே செல்லக்கூடாது. மேலும் தேர்வு முதன்மை கண்காணிப்பாளர்கள் அவரவர் மையத்திற்கான பெயர் பட்டியல், வினாத்தாள், ஓஎம்ஆர் விடைத்தாள்கள் ஆகியவற்றை முறையாக வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் என்று இல்லாமல் தனியார் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் கூட தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.