இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த தேர்வு கட்டாயம்!! உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!

இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த தேர்வு கட்டாயம்!! உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!

உயர் கல்வித் துறை தற்பொழுது புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு முதல் பிகாம், பி பி ஏ, பி சி ஏ ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் தமிழ் மொழி தேர்வு கட்டாயம் எனக் கூறியுள்ளனர். இதற்கு முன் இந்த பாடப்பிரிவுகளில் முதலாம் ஆண்டு மட்டும் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக இருந்தது. தற்பொழுது இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் வரும் செமஸ்டர் தேர்வுகளில் தமிழ் பாடம் கட்டாயம் எனக் கூறியுள்ளனர்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய கல்லூரிகளை தவிர்த்து மற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என தெரிவித்துள்ளனர்.அனைத்து கல்லூரிகளிலும் ஒரே முறையை பின்பற்றும் வகையில்  இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இந்த தமிழ் மொழி தேர்வு நடப்பாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.இதுகுறித்த சுற்றறிக்கையை உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திக்கேயன் கூறியுள்ளார்.