கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு தேடி வரும் வாய்ப்பு!

0
98
the-action-order-issued-by-the-education-department-opportunity-for-students-who-do-not-pursue-higher-education
the-action-order-issued-by-the-education-department-opportunity-for-students-who-do-not-pursue-higher-education

கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு தேடி வரும் வாய்ப்பு!

கல்வித் துறை மாணவர்களின் விவரங்களை சேகரித்து வந்தது.மேலும் கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அந்த உத்தரவில் 2021-22ஆம் கல்வியாண்டில் பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுதிய பிறகு அடுத்ததாக 2022-23ஆம் கல்வியாண்டில் உயர்கல்வியை தொடராத மாணவ –மாணவிகளின் விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளது.அந்த விவரங்களின் அடிப்படையில் 8 ஆயிரத்து 249பேர் இந்த ஆண்டு உயர்கல்வியை தொடராமல் இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் அவர்களை தனித்தனியாக தொடர்பு கொண்டு தற்போதைய நிலையும் தெரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 1531 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.மீதமுள்ள 6 ஆயிரத்து 718 மாணவ மாணவிகள் வறுமை ,நிதி பற்றாக்குறை ,குடும்ப சூழல்,தேர்வில் தோல்வி ,உயர்படிப்பில் ஆர்வமின்மை ,பணி,பெற்றோர் அனுமதி மறுப்பு ,உடல்நலக்குறைவு,தேர்வு எழுதாதவை ,கல்லூரியில் விரும்பிய பாடத்தில் சேர்க்கை கிடைக்காதவை ,வீட்டின் அருகாமையில் கல்லூரி இல்லாதது ,மறு தேர்வு தேர்ச்சி பெறும் பொழுது கல்லூரியில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்தது.போன்ற காரணங்களினால் உயர்கல்வியை தொடராமல் மாணவர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் உள்ள 4 ஆயிரத்து 7 மாணவர்களை தொலைபேசி இணைப்பு கிடைக்காத காரணத்தால் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.மேலும் சில மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் உள்ள பிற துறையினருடன் இணைந்து உயர்கல்வி தொடர்ந்து படிக்க சில நடவடிக்கைகளை கல்வித்துறை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இதனையடுத்து வரும் 20ஆம் தேதி காலை10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முகாம் நடத்த வேண்டும்.அந்த முகாமிற்கு வருகை புரிய வேண்டும் எனவும் சமந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து அவர்களை தவறாமல் கலந்து கொள்ள அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

author avatar
Parthipan K