செப்டம்பர் மாதம் 16 நாட்கள் வங்கிகள் விடுமுறையா?
நாட்டில் அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் இந்த மாதம் 16 நாட்கள் விடுமுறை என மத்திய ஆர்.பி.ஐ நிர்வாகம் அறிவித்துள்ளது.
விடுமுறைக்கான நாட்கள் பின்வருமாறு:-
1. செப்டம்பர் 3, 2023: ஞாயிறு
2. செப்டம்பர் 6, 2023: ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மாஷ்டமி
3. செப்டம்பர் 7, 2023: ஜென்மாஷ்டமி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணாஷ்டமி.
4. செப்டம்பர் 9, 2023:
2வது சனிக்கிழமை.
5. செப்டம்பர் 10, 2023: ஞாயிறு.
6. செப்டம்பர் 17, 2023: ஞாயிறு.
7. செப்டம்பர் 18, 2023: வர்சித்தி விநாயக விரதம் மற்றும் விநாயக சதுர்த்தி.
8. செப்டம்பர் 19, 2023: விநாயக சதுர்த்தி.
9. செப்டம்பர் 20, 2023: விநாயக சதுர்த்தி (2வது நாள்) மற்றும் நுகாய் (ஒடிசா).
10. செப்டம்பர் 22, 2023: ஸ்ரீ நாராயண குரு சமாதி தினம்.
11. செப்டம்பர் 23, 2023: நான்காவது சனிக்கிழமை மற்றும் மகாராஜா ஹரி சிங்கின் பிறந்தநாள் (ஜம்மு & காஷ்மீர்).
12. செப்டம்பர் 24, 2023: ஞாயிறு.
13. செப்டம்பர் 25, 2023: ஸ்ரீமந்த் சங்கர்தேவாவின் பிறந்தநாள்.
14. செப்டம்பர் 27, 2023: மிலாட்-இ-ஷெரிப் (முகமது நபியின் பிறந்த நாள்).
15. செப்டம்பர் 28, 2023: ஈத்-இ-மிலாத் அல்லது ஈத்-இ-மிலாதுன் நபி
16. செப்டம்பர் 29, 2023: ஈத்-இ-மிலாத்-உல்-நபி்
எனவே இந்த மாதம் 16 நாட்கள் விடுமுறை என்பதால் வங்கி பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த நாட்கள் விடுமுறை என அறிந்தும், வேலை நாட்கள் எந்த நாட்கள் என்பதையும் அறிந்து வங்கிகளுக்கு செல்ல வேண்டுமென வாடிக்கையாளர்களை வங்கி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.