நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேலையில்லா பட்டதாரிகளின் சதவீதம்: என்னவாகும் எதிர்காலம்?

0
89

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேலையில்லா பட்டதாரிகளின் சதவீதம்: என்னவாகும் எதிர்காலம்?

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேலையில்லா பட்டதாரிகள் சதவீதத்தை பார்க்கும்போது நம் நாட்டின் வருங்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கி வேலையின்மையை முற்றிலுமாக ஒழித்துக் கட்டிவிடுவோம் என உறுதியளித்து பாஜக ஆட்சிக்கு வந்தது.

ஆனால் 2014ஆம் ஆண்டினை ஒப்பிடுகையில், 2.5 சதவீதத்திற்கும் மேலாக வேலையின்மை அதிகரித்துள்ளது என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் கூறியுள்ளது.

2023 ஜனவரி – மார்ச் காலப்பகுதியில் நகர்ப்புறங்களில் உள்ள 15 முதல் 29 வயது உள்ளவர்களிடையே நிலவும் வேலையின்மை என்பது 17.3 சதவீதம் ஆகும். இவர்களில் ஆண்களிடையே நிலவும் வேலையின்மை என்பது 15.6 சதவீதம் எனில், பெண்களிடையே அது 22.9 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் வேலையில்லாத பட்டதாரிகளின் சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை சரி செய்ய மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்துள்ளது. ஆனால் மத்திய அரசு நாட்டின் இளைஞர்கள் படித்து முடித்தவுடன் வேலை வாய்ப்பு பெறுவதில் பல்வேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம் என்று கூறுகிறது.

நம் நாட்டின் வேலையில்லா பட்டதாரிகளின் சதவீதம் இவ்வாறு அதிகரித்துக் கொண்டே போனால் வருங்கால தலைமுறை பெரிதும் பாதிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K