தமிழ்நாட்டைச் சேர்ந்த கோயம்புத்தூரில் 19 வயது பெண் பொள்ளாச்சியில் தன்னை விட இரண்டு வயது சிறிய 17 வயது சிறுவனை திருமணம் செய்து அவனை பாலியல் வன்கொடுமை செய்து கைதான சம்பவம் தான் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினரின் தகவலின் படி, 11 ஆம் வகுப்பு முடித்த அந்த பெண், பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் 17 வயது சிறுவனுடன் நட்பு கொண்டுள்ளார்.குற்றம் சாட்டப்பட்ட பெண் அந்த நகரத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்துள்ளார். 17 வயது சிறுவன் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளான். அவர் அடிக்கடி அந்த பெண்ணின் வேலை செய்யும் இடத்திற்கு சென்று சென்று வந்துள்ளான். சுமார் ஒரு வருடத்தில், அந்தப் பெண் பையனிடம் நட்பு வளர்ந்துள்ளது.
ஆகஸ்ட் 26 அன்று, அவர்கள் இருவரும் பழனிக்கு சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். அடுத்த நாள், கோயம்புத்தூருக்கு திரும்பும் போது செம்மேடு அருகே அந்தப் பெண் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுவனுக்கு வயிற்று வலி ஏற்படுள்ளது, உடனே அந்த பெண் அந்த சிறுவனை பொள்ளாச்சிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்..
அந்த பெண்ணும் சிறுவனும் பெற்றோர்களால் பிரிக்கப்பட்டனர் என்று இன்ஸ்பெக்டர் ஆர் கோப்பெருந்தேவி கூறினார். மேலும் அந்த பெண் மீது ஐபிசி பிரிவு 366 (கடத்தல்) மற்றும் போக்சோ சட்டத்தின் 6 (5) கீழ் வழக்கு போடபட்டதாக தகவல் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, இந்த வழக்கில் பல முரண்பாடுகள் இருப்பதாக சட்ட வல்லுனர்கள் கூறி வருகின்றனர். மேலும் மூத்த வழக்கறிஞர் சி ஞானபாரதி TNIE இடம், “ஒரு பெண் கடத்தப்பட்டால் மட்டுமே IPC பிரிவு 366 பொருந்தும். அதேபோல, POCSO சட்டத்தில் 5 (l) மற்றும் 6 ஆகிய பிரிவுகள் பெண் சந்தேக நபர்களுக்கு எதிராக பொருந்தாது.” என்று கூறியுள்ளார்.