ரயில் பெட்டியில் கேட்பாரற்ற பையில் 2 கிலோ கஞ்சா! அந்த மர்ம நபர்கள் யார்?

Photo of author

By CineDesk

ரயில் பெட்டியில் கேட்பாரற்ற பையில் 2 கிலோ கஞ்சா! அந்த மர்ம நபர்கள் யார்?

CineDesk

Updated on:

ரயில் பெட்டியில் கேட்பாரற்ற பையில் 2 கிலோ கஞ்சா! அந்த மர்ம நபர்கள் யார்?

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதைதொடர்ந்து கண்ணன், சங்கர், சக்திவேல் ஆகியோர் இன்று ரெயிலில் சோதனை செய்தனர்.

அப்போது பொதுப்பெட்டியில் ஒரு பை கேட்பாரற்று கிடைந்தது. அந்த பையை சோதனை செய்தபோது 2 பண்டல்களில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பையைக் கொண்டு வந்த பயணிகள் குறித்து விசாரித்தபோது தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

இதையடுத்து காவல் துறையினர் வருவதைப் பார்த்ததும் கஞ்சா கடத்தல் ஆசாமிகள் தப்பிச்சென்றிருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. கஞ்சா பறிமுதல் செய்து கடத்தி வந்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.