2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதல்!! நாடு கடத்தப்படும் ஹூசைன் ராணா!!

0
61
2008 Mumbai terror attack!! Hussain Rana to be deported!!
2008 Mumbai terror attack!! Hussain Rana to be deported!!

உலகை திரும்பி பாக்க வைத்த மும்பை பயங்கரவாத தாக்குதல் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பரில் நடந்தது. கடல் வழியாக மும்பைக்குள் புகுந்த தீவரவாதிகள் முப்பையில் 8 இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதில் ஆறு அமெரிக்கர்களும் ஆவர். இந்த சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். தாக்குதலின் ஈடுபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் மட்டும் உயிரோடு பிடிபட்டான்.

பின்னர் தூக்கிலிடப்பட்டான் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி தஹாவூர் ஹூசைன் ராணா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இந்த நிலையில் கனடா குடியுரிமை பெற்று அமெரிக்காவில் தலைமறைவாக இருந்தார். குற்ற வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது. அமெரிக்கா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவனை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கேட்டுக்கொண்டது.

அமெரிக்காவும் அதற்கு சம்மதம் தெரிவித்தது. அதன்படி அமெரிக்காவில் ராணாவின் தண்டனை முடிந்த பிறகு 2020-ல் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவான் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோவிட்  பாதிப்பால் நாடு கடத்தப்படுவது தாமதமானது. அதற்குள் ராணுவ தரப்பில் அமெரிக்கா கோட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்தியா அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்தை காரணம் காட்டிய ராணாவின் மனு தள்ளுபடி செய்தது.

இதனை அடுத்து கடைசி கட்டம் முயற்சியாக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்க விசாரணையின் போது அமெரிக்க அரசு சார்பில் ஆஜரான ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த ஆதரவு தெரிவித்தார். அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறினார். கூடிய விரைவில் ராணாவை  இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம் என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Previous articleசொந்த நாட்டிற்கே துரோகம் இழைத்த பஷர் அல் அசாத்!! இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலால் சீர்குலைந்த சிரியா!!  
Next articleமன்னிப்பு கேட்ட அஸ்வின்.. அவசரத்தில் வார்த்தையை விட்ட தந்தை!! திகைப்பில் ஊடகங்கள்!!