T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எங்கே? வெளியான புதிய தகவல்

Photo of author

By Anand

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எங்கே? வெளியான புதிய தகவல்

Anand

T20 World Cup 2021

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி எங்கே? வெளியான புதிய தகவல்

இதற்கு முன்னதாக 7 வது T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடபட்டிருந்தது.இந்நிலையில் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பானது குறையாமல் உள்ளதால் இந்த T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாகா விட்டாலும் அங்கு போட்டியை நடத்துவதற்கான முதல்கட்ட பணிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தொடங்கியுள்ளது.இதனையடுத்து ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டுள்ள ஐ.பி.எல் போட்டிகளை செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் அக்டோபர் 17 தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை அக்டோபர் 17 தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை அங்குள்ள துபாய்,அபுதாபி மற்றும் சார்ஜா உள்ளிட்ட இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதில் தொடக்க போட்டிகள் சிலவற்றை ஓமனில் நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.