மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசத் திருமணம்! முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

0
139

மதுரையில் 55 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பெரியார் பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம் அருகே 2 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருக்கின்ற கடைகளுடன் கூடிய சுற்றுலா வளாகம், தெற்கு ஆவணி மூல வீதியில் இரண்டு கோடியே 45 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டிருக்கின்ற அங்காடிகள், திருச்சியில் 18 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருக்கின்ற உய்யக்கொண்டான் ஆற்றின் முகப்பு, தஞ்சாவூரில் 15 கோடியே 49 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட பழைய பேருந்து நிலையம், திருவையாறு பேருந்து நிலையத்தில் 14 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருக்கின்ற வணிகவளாகம்,

திருநெல்வேலியில் 13 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட பாரத ரத்னா எம்ஜிஆர் பேருந்துநிலையம், வேலூரில் 13 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு இருக்கிற 2 .40 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையம், தென்பெண்ணை ஆற்றின் நீர் ஆதாரமாக கொண்டு 8.10 கோடி மதிப்பீட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியத்தைச் சார்ந்த நாகொண்ட பள்ளி மற்றும் 27 ஊரக குடியிருப்பு காண கூட்டு குடிநீர் திட்டம் என்று ஒட்டுமொத்தமாக 533 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 44 முடிவுற்ற திட்டங்களை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறே முதலமைச்சர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக நேற்று திறந்து வைத்து இருக்கிறார்.

நோய்த்தடுப்பு பணியின்போது ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டு உயிரிழந்த சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் முன் களப்பணியாளர்கள் ஆன களப்பணியாளர்கள் கணேசன் மற்றும் மின்னியலாளர் பாலாஜி உள்ளிட்டோரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவித் தொகையாக 25 லட்சத்திற்கான காசோலைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

பேரூராட்சிகளில் பணிபுரிந்து பனிக்காலத்தில் உயிரிழந்த 107 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 வாரிசுதாரர்களுக்கு, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பணிபுரிந்து பணி காலத்தில் உயிர்நீத்த ஆயிரம் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 வாரிசுதாரர்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கி இருக்கிறார். ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 37 பேருக்கு கருணையின் அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்.

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் 2021 – 22 உள்ளிட்ட ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கோவிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது எனவும், கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த அறிவிப்பினை நிறைவேற்றும் விதத்தில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடைபெற இருக்கின்ற மாற்றுத்திறனாளி திருமணத்திற்கு மணமகன் சுரேஷ்குமார் மற்றும் மணமகள் மோனிஷா உள்ளிட்டோருக்கு கோவிலில் திருமணம் செய்ய கட்டணம் இல்லை என்ற உத்தரவை முதலமைச்சர் ஸ்டாலின் பிறப்பித்திருக்கிறார். அதோடு மணமக்களுக்கு வாழ்த்துக்களுடன் பரிசுப் பொருட்களையும் வழங்கி வாழ்த்தி உள்ளார்.

இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்ததன மூலமாக இனிவரும் காலங்களில் திருமணம் நடைபெற விருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து கோவில்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது.