மேல்நிலை வகுப்பறைக்கு நிச்சயமாக பொதுத்தேர்வு நடத்தப்படும்! அமைச்சர் உறுதி!

0
80

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களை துணிச்சலாக 144 171098 என்ற எண்ணுக்கு அல்லது ஆசிரியர்களிடமும் மறைக்காமல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறோம், கரூரில் ஒரு ஆசிரியர் மீது தவறான குற்றச்சாட்டு வைத்துவிட்டார்கள் என்று தெரிவித்து அவராகவே தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டு இருக்கிறார் என தெரிவித்து இருக்கிறார். பாலியல் துன்புறுத்தல் குறித்த புகாரை யாரும் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது அதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றோம், புகாரில் இருக்கின்ற உண்மையை முழுவதுமாக தெரிந்து கொண்டு அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் கூறியிருக்கிறார்.

மத்திய அரசு மூலமாக 412 இடங்களில் தலா 2 மருத்துவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் சுழற்சிமுறையில் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களின் உடல்நிலை தொடர்பாக விசாரித்து வருகிறார்கள். அவர்களை வைத்து உளவியல் ரீதியாகவும் எப்படி ஆலோசனை கொடுக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறோம் அதற்கான பயிற்சி மிக விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

கால அட்டவணை படி தேர்வுகள் நடைபெறும் ஜனவரி மாதத்தில் முதல் திருப்புதல் தேர்வு, மார்ச் மாதத்தில் இரண்டாவது திருப்புதல் தேர்வு, உள்ளிட்டவை நடைபெறும் பாடத்திட்டம் மற்றும் அப்போதைய சூழல் தொடர்பாக முடிவுசெய்து பொதுத்தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். 10 மற்றும் 12 உள்ளிட்ட வகுப்பு மாணவர்களுக்கு இந்த வருடம் பொதுத்தேர்வு நிச்சயமாக நடைபெறும் ஆகவே மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.