27 ஏலக்காய் + ஒருவரி மந்திரம் உங்களை கோடீஸ்வரராக மாற்றும்!!

Photo of author

By Divya

27 ஏலக்காய் + ஒருவரி மந்திரம் உங்களை கோடீஸ்வரராக மாற்றும்!!

அனைவருக்கும் நகை, பணம் சொத்துக்களுடன் கோடீஸ்வரராக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஏழைகள் கனவிலாவது கோடீஸ்வரர் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றறு நினைப்பார்கள்.

தங்களது எதிர்கால திட்டங்களை சரியாக வகுத்து செல்வ செழிப்புடன் வாழ சிலர் ஆசைப்படுவார்கள். ஆனால் இந்த ஆசை நிறைவேற நம்மிடம் பொறுமை, திறமை, விடா முயற்சி இருக்க வேண்டும்.

அதனோடு கடவுளின் ஆசீர்வாதம் மிகவும் முக்கியம். நாம் செல்வ செழிப்போடு வாழ மகா லட்சுமி தாயரின் அனுகிரகம் இருக்க வேண்டும்.

அதற்கு வீட்டில் ஒரு எளிய பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை அன்று செய்யலாம்.

பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருள் ஏலக்காய். இதை 27 என்ற எண்ணிக்கையில் வாங்கி வைத்துக் கொள்ளவும்.

ஏலக்காய் அதிக வாசனை நிறைந்த பொருள். இவை மகா லட்சுமி தாயாருக்கு உகந்த பொருளாக உள்ளது.

இந்த ஏலக்காயை வைத்து வீட்டு பூஜை அறையில் உள்ள லட்சுமி தேவி அர்ச்சனை செய்ய வேண்டும். அப்பொழுது ‘ஸ்ரீ மகாலட்சுமியே நமஹ’ என்ற லட்சுமி மந்திரத்தை 27 முறை மனதார உச்சரிக்க வேண்டும்.

இவ்வாறு செய்த பின்னர் பாதாம், பிஸ்தா, முந்திரியால் செய்யப்பட்ட நெய்வேத்தியத்தை லட்சுமி தாயாருக்கு படைக்க வேண்டும். பிறகு தீப ஆராதனை காட்டி பரிகாரத்தை நிறைவு செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்தை வாரத்தில் வியாழன் அல்லது வெள்ளி அன்று செய்து வந்தால் விரைவில் கோடீஸ்வரர் ஆகக் கூடிய யோகம் கிடைக்கும்.