எதிர்நீச்சல் சீரியல் ஆதி குணசேகரின் கனவு இல்லத்தை திறந்து வைக்க போகும் 3 பேர்!! இதுதான் அவரின் மிகப்பெரிய ஆசையாம்!!
பிரபல தொலைக்காட்சியில் ஓளிபரப்பப்பட்டு வரும் எதிர்நீச்சல் சீரியலின் முக்கிய நடிகரான மாரிமுத்து கடந்த வெள்ளி அன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற ரோலில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.இப்படி புகழின் உச்சியில் இருந்த நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் திரையுலகினர்,ரசிகர்கள் என்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மாரிமுத்து இல்லாத அந்த எதிர்நீச்சல் சீரியலை எப்படி பார்ப்போம் என்று ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்பொழுது மாரிமுத்துவின் கனவு இல்லம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கின்றது.தான் ஒரு பெரிய வீட்டை வாங்கி இருப்பதாக பல பேட்டிகளில் பெருமையாக கூறி இருக்கும் நிலையில் அந்த பிரம்மாண்ட வீட்டின் விலை 1.5 கோடி என்று சொல்லப்படுகிறது.
இந்த வீடு வாங்குவது அவரின் பெரிய கனவே இருந்துள்ளது.அந்த வீட்டில் சிற்பங்கள், பெயிண்டிங் என கலைநயத்தோடு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து அலங்கரித்துள்ள மாரிமுத்து அவர்கள் எதிர்நீச்சல்,திரை பிரபலங்கள் என்று பலரிடமும் விரைவில் கிரகப்பிரவேசம் நடத்த போகிறேன் என்று பெருமையாக சொல்லி வந்துள்ளார்.அதுமட்டுமின்றி தன்னுடைய கனவு இல்லத்தை சிவகுமார்,சூர்யா,கார்த்தி தான் திறந்து வைக்க வேண்டுமென்று மாரிமுத்து ஆசை கொண்டிருந்தார்.
அவரின் மிகப்பெரிய கனவு நிறைவேறுவதற்கு முன் விதி அவரை இறைவனடி சேர்த்து விட்டது.
இருந்த போதும் மாரிமுத்துவின் கடைசி ஆசையை சிவகுமார் குடும்பத்தினர் நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.