பந்தை பார்த்து விராட் கோலி பயந்து விட்டாரா?

Photo of author

By Parthipan K

8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய 3 இடங்களில் வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. சக வீரர்களுடன் இணைந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு பயிற்சியில் ஈடுபட்ட அனுபவம் குறித்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘5 மாதங்களுக்கு பிறகு இப்போது தான் பேட்டை எடுத்துள்ளேன். வலை பயிற்சியில் பேட்டைப்பிடித்து முதல்முறையாக பந்தை எதிர்கொண்ட போது, கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. ஆனாலும் எதிர்பார்த்ததை விட முதலாவது வலைபயிற்சி சிறப்பாகவே இருந்தது. ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டதால் வலுவான உடல்தகுதியுடன் இருப்பதாகவே உணர்கிறேன் என்று கூறினார்.