சைபர் க்ரைமுக்கே சவாலாய் அமைந்த வழக்கு!! பேடிஎம் உபயோகிப்பவர்களே அலார்ட்!!
போலீசார் மேற்கொண்ட வழக்குகளில் மிகவும் நூதனமாகவும் அடுத்தடுத்து நடந்த எதிர்பாராத சம்பவங்களும் திருடிய நபர் ஒரு வயதானவர் என்பதும் இந்த கேசிற்கான திருப்பங்கள் ஆகும்.
இன்றைய காலகட்டத்தில் படித்தவர்கள் தான் படிக்காதவர்களை ஏமாற்றுகிறார்கள் என்ற நிலைமை மாறி இப்பொழுது படிக்காதவர்கள் தான் படித்தவர்களை நூதனமாக ஏமாற்றுகிறார்கள் அதற்கு உதாரணமாக நிஜமாக நடந்த ஒரு சம்பவத்தை கேட்கலாம்.
நபர் ஒருவர் பள்ளிகளுக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் தான் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வருவதாகவும் அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த இருப்பதாகவும் கூறுகிறார்.
அந்தத் திட்டம் என்னவென்றால் மேல்நிலைப் பள்ளிகளை தேர்ந்தெடுத்து அதில் 500 பூச்செடிகளை வைப்பது ஆகும்.
அதற்காக அந்த நபர் தான் ஒரு தலைமை செயலகத்தில் பணி புரியும் நபர் என்றும் இந்த மேல்நிலைப் பள்ளியில் 500 பூச்செடிகளை வைத்து ரிசர்ச் செய்யப் போவதாகவும் கூறியுள்ளார்.
அங்கு இருந்தே வேறொரு நபருக்கு போன் செய்து வரவைத்து நான் கேள்விப்பட்டதிலேயே நீங்கள் தான் ரொம்ப நல்ல மேஸ்திரி என்றும் இந்த அரசு அறிவித்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக நீங்கள் 500 பூச்செடிகளை செய்து தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இத்திட்டத்திற்காக தமிழக அரசு 13 லட்சம் ஒதுக்கியதாகவும் அந்த நபர் கூறியுள்ளார். இதற்கு அந்த மேஸ்திரி சரி நான் செய்து தருகிறேன் என்று கூறியதற்கு அந்த நபர் தான் ஆர்டர் எழுதுவது போல் எழுதி அந்த நபரிடம் கொடுப்பது போன்று ஒரு புகைப்படத்தையும் எடுத்துக் கொள்கிறார்.
பின்பு அந்த நபர் சென்ற நிலையில் சிறிது நேரம் கழித்து அந்த மேஸ்திரிக்கு போன் வருகின்றது.
அதில் அந்த நபர் நான் உங்களுக்கு 13 லட்சம் மதிப்புள்ள ஆர்டரை வாங்கித் தருகிறேன் என்றும் அதற்கு நீங்கள் எனக்கு ஒரு சதவீதம் மட்டும் கொடுத்தால் போதும் என்று கூறுகிறார்.
அதற்கு அந்த மேஸ்திரியும் சரி என்று கூறியதும் அந்த நபர் paytm நம்பரை அனுப்பி இதற்கு பணத்தை அனுப்பி வையுங்கள் என்று சொல்கிறார். அதற்கு அந்த மேஸ்திரியும் பணத்தை அனுப்பி வைக்கிறார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் போன் செய்கிறார் அதில் 13 லட்சம் ஆர்டரை கையெழுத்து போடுபவருக்கும் இரண்டு சதவீதம் பணம் வேண்டும் என்று கேட்கிறார்.
அதற்கு அந்த மேஸ்திரியும் 13 லட்சம் ஆர்டர் கிடைக்கப்போகிறது என்று நினைத்து மீண்டும் தருகிறேன் என்று கூறி அதே பேடிஎம் எண்ணுக்கு பணத்தை அனுப்பி வைக்கிறார்.
சிறிது நேரம் கழித்து மேஸ்திரியும் அந்த நபருக்கு போன் செய்கிறார் ஆனால் போன் தற்போது உபயோகத்தில் இல்லை என்று வருகிறது. உடனே பதறிப் போன மேஸ்திரியும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகாரை தெரிவிக்கிறார்.
போலீசார் புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். பேடிஎம் செய்யப்பட்ட எண் மற்றும் அதனுடைய வங்கி கணக்கு எண்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்பொழுது அதில் அந்த நபர் வருடத்திற்கு 6-7 முறையாவது திருப்பதி செல்லக் கூடியவர் என்று தெரிய வருகிறது.
உடனே போலீசார் திருப்பதிக்கு சென்றுள்ளனர் அங்கு விசாரித்த போது அது ஒரு டீக்கடையின் பேடிஎம் எண் என்றும் தெரியவருகிறது. பின்னர் அந்த டீக்கடைக்கு சென்று விசாரித்த போலீசார் அந்த டீக்கடை நபரிடம் கேட்டபோது அதற்கு அந்த டீக்கடை நபரோ மிரள வைக்குமாறு பதில் கொடுத்தார்.
அவர் கூறியதில் என் கடைக்கு ஒரு நபர் வருவார் அவர் ஒரு ஹெல்த் இன்ஸ்பெக்டர் என்றும் அவர் என்னிடம் நன்றாக பேசுவார் இருவருக்கும் தமிழ் தெரியும் என்பதன் காரணமாக பழக்கமானோம் என்றார்.
அவர் என்னிடம் என் மகன் எனக்கு பணம் அனுப்புவான் அதை மட்டும் நீ எடுத்து கொடுத்தால் போதும் என்று உதவி கேட்டதாக கூறினார். அதற்கு அந்த டீக்கடை நபரோ அது ஒன்றும் பரவாயில்லை நான் எடுத்து தருகிறேன் என்று கூறி எடுத்துக் கொடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.
பின்பு போலீசார் அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார் என்று கேட்டதற்கு அவர் இங்கு அருகில் உள்ள ஒரு லாட்ஜில் தான் தங்கி இருக்கிறார் என்று கூறினார். விரைந்து சென்ற போலீசார் அந்த நபரை மடக்கிப்பிடித்த போது போலீசாரை மிகவும் திடுக்கிடும் விதமாக மிரள வைத்தார் அந்த நபர். ஏனென்றால் அவர் ஒரு வயதானவர் அவருக்கு 50 வயது இருக்கும்.
பின்பு அந்த நபரை விசாரித்த போது நான் ஒரு பெயிண்ட் அடிப்பவர் என்றும் நான் பள்ளிகளில் பெயிண்ட் அடித்தவன் என்றும் அதனால் பள்ளிகளுக்கு யார் யார் வருவார்கள் என்று நன்கு அறிந்தவன் என்றார்.
அதை வைத்துத்தான் எப்படி சொன்னால் கேள்வி எழுப்ப மாட்டார்கள் என்று தெரிந்து என்னிடம் பணம் இல்லாத போதெல்லாம் இப்படி கூறி பணத்தை திருடுவேன் என்று ஒப்புக்கொண்டார்.
இந்த சம்பவமானது போலீசார் மேற்கொண்ட விசாரணைகளிலேயே மிகவும் திடுக்கிடும் அனைவரையும் திரள வைக்கும் ஒரு சம்பவமாக இருந்தது.